கன்னி ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது.. தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. என்ஜாய்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 30 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி வார ராசி பலன்
கன்னி ராசிக்காரர்கள் யோகத்தை அதிக அளவில் பெறும் காலகட்டமாக இருக்கும். திருவண்ணாமலைக்குச் சென்று வருவது வெற்றிகளையும், நல்ல பாக்கியத்தையும் கொடுக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நம்பிக்கை கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
தடைகள் நீங்கும்
பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு அனுகூலம் ஏற்படும். காது, மூக்கு, தொண்டை, சளி, சுவாசக் கோளாறு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மனதிற்குப் பிடித்த நிலம் வாங்குவது, இடத்தில் முதலீடு செய்வது, வீடு வாங்குவது, வீடு கட்டுவது, வீட்டை புதுப்பிப்பது போன்றவற்றைச் செய்து மகிழ்வீர்கள்.
அனுகூலம்
வாகனம் தொடர்பான விஷயங்களில் சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றிகள் கிடைக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய தொழில், புதிய உத்தியோகம், புதிய வியாபாரம் வந்தால் வேண்டாம் என்று நினைக்காமல் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
ஏற்றம்
ஆடி மாதம் வரையிலும் நல்ல விஷயங்கள் அனைத்தும் உங்கள் வீட்டு வாசலைத் தேடி வரும். இதனை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலையையும், மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையையும் அதீத கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி அனைத்து விஷயங்களும் சந்தோஷம், ஏற்றம், நம்பிக்கையைத் தருவதாக அமையும் காலகட்டமாக இருக்கும்.
பண வரவு அதிகரிக்கும்
மேலதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். புதிய புதிய உத்திகளை வகுத்து தொழில், வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். அதன் மூலமாக ஆதாயமும் கிடைக்கும். திடீர் வாய்ப்புகள், அதிர்ஷ்டங்கள் வருவதால் அதனைப் பயன்படுத்திக் கொள்வது முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
-
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
Mithunam Rasi Palan: கொடிகட்டி பறக்கப்போகும் மிதுன ராசி.. தொட்டது துலங்கும் யோகம் -
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மாற்றம்.. எந்ததெந்த விஷயங்களில் கவனம்? -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications