லக்கி பாஸ்கராக மாறும் கும்பம், மீனம்.. தங்க மழையில் நீச்சல் அடிக்கப் போறீங்க
வார ராசி பலன்: வைகாசி 19 முதல் 25 ஆம் தேதி வரை, ஜூன் 2 முதல் ஜூன் 8 ஆம் தேதி வரை கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இரண்டு ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையில் பெருமாள், தாயார் வழிபாடு செய்வது, தாமரையைக் கொடுத்து அர்ச்சனை செய்வது அஷ்டலட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த தடைகள் நிவர்த்தி ஏற்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு மன அழுத்தம் நீங்கும்.
உத்தியோகத்தில் அதிக அளவிலான ஏற்றத்தைப் பெறுவீர்கள். அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75, 90 ஆவது பாடலை படிக்கக் கூடிய ராசிக்காரர்கள் நீங்கள் தான். மன அழுத்தத்தை தவிர்ப்பது நல்லது. சுப காரியம் அடுத்தடுத்து நடக்கும். நீண்ட நாட்களாக தேக ஆரோக்கியத்தில் இருந்து வந்த உபத்திரம் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறும் ஆச்சரியத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு ரீதியாக எடுத்த காரியங்களில் பெரிய சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். வண்டி வாகனங்களில் மாற்றங்களுக்காக காத்திருப்பவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும்.
தேக ஆரோக்கித்தில் மட்டும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சனியின் அமைப்பு கடைசியாக இருந்தாலும் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது அற்புத பலன்களை ஏற்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட சிறு பிரச்சனைகள் இருந்தாலும் உரிய மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் பிரச்சனை ஏற்படும்.
அடுத்தடுத்து நல்ல மாற்றங்கள் ஏற்படும். லாபம் ஏற்படும். தெய்வ வழிபாடுகள், விடுபட்ட வழிகளை நிவர்த்தி செய்து மகிழ்வீர்கள். தெய்வ கடாட்சம் உண்டாகும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்கள் யோக பலத்தை அதிகளவில் பெறப் போகிறீர்கள். நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு புதன்கிழமையில் விளக்கேற்றி வழிபடுவது விசேஷமான பலன்களைத் தரும். தடைகளை தவிடு பொடியாக்கும். தாய் வழி, தந்தை வழி உறவுகளிடம் வாக்குவாதம் இல்லாமல் இருப்பது, அவர்களுடைய தேக ஆரோக்கியத்தை சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
பற்களில் தொந்தரவு, காது, மூக்கு, தொண்டை பிரச்சனை, அலர்ஜி, சைனஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கண்டிப்பாக சனிக்கிழமை மதிய வேளைகளில் எலுமிச்சை சாதத்தை தானமாகக் கொடுப்பது ஏற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். எடுத்த காரியத்தில் ஜெயம், நம்பிக்கை ஏற்படும்.
இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் நிச்சயமாக ஏற்படும். பழைய கடன்களை பைசல் செய்யும் முயற்சி வெற்றியை ஏற்படுத்தும். புதிதாக கடன் வாங்க நினைப்பவர்களுக்கு கிடைக்கும் அமைப்பு உண்டாகும். கிரெடிட் கார்டு வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்வது அற்புதமான நன்மையைத் தரும். இல்லையெனில் பெரிய பாதிப்புகளைச் சந்திப்பீர்கள். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தொழில் ரீதியாக முன்னேற்றம், வியாபாரத்தில் அனுகூலம், பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஏற்றம், தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். புதிய தொழில் தொடங்கக்கூடிய பிராப்தம் ஏற்படும். அடிமைத் தொழிலில் இருந்து சொந்த தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.












Click it and Unblock the Notifications