கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. துலாம் ராசிக்கு தொட்ட காரியங்கள் துலங்கும் யோகம்
வார ராசி பலன்: ஆடி மாதம் 17 ஆம் தேதி பிறக்கவுள்ளது. ஜூலை 14 முதல்20 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் துவங்கப் போகிறது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், குரு அமர்ந்திருப்பதால் நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்கள் காணப்படும். 10 ஆம் இடத்துக்கு சூரியன் போகிறார். அடுத்த 15 நாட்களுக்கு வேலையில் மிகுந்த மன அழுத்தம், குழப்பம், குடைச்சல் ஏற்படும். வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களால் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
புதிய நபர்களிடம் கவனம்
பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் இணைந்துள்ளதால் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படும். பயணங்களின்போது புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் மிகுந்த கவனம் தேவை. குறிப்பாக தூரப் பயணங்களின்போது மிகுந்த கவனம் தேவை. எந்த வகையான நண்பர்களாக இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது. பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், ராகு சேர்ந்திருப்பதால் 3 நாட்கள் திடீர் யோகத்தைக் கொடுக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
திடீர் வெற்றி கிடைக்கும். மனத்திடம் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். 6 ஆம் இடத்தில் சனி, சந்திரன் சேர்ந்திருப்பதால் சிலர் இருக்கும் கடன்களை எல்லாம் அடைத்து முடிப்பீர்கள். சிலருக்கு அதிக கடன் வாங்குவதற்கான வாய்ப்பும், செலவும் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ராசிநாதனாகிய சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நல்லது. ஆனால் அதே நேரத்தில் சனியில் பார்வையிலும் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது.
தொழிலில் முன்னேற்றம்
ஜூலை 17 ஆம் தேதி வரை புதன் 10 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் தொழில், வேலை, உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பின்னர் சூரியன் அங்கு வருவதால் சனியும், சூரியனும் இணைந்து சிறு பிரச்சனைகள் ஏற்படும். சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. பண வரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நரசிம்மர் வழிபாடு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications