மிதுன ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: ஆனி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான அதாவது ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் அனைத்தும் நடைபெறும் காலகட்டமாக இருக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து விஷயங்களும் நடக்கும் யோக காலகட்டம். மாற்றங்களுக்குத் தயாராகிக் கொள்வது நன்மை பயக்கும். தொழில் விஷயங்களில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பை இழக்கும் நிலை ஏற்படும்.
கவனம்
குறை ரத்த அழுத்தம், அதீத ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. கணவனாக இருந்தால் மனைவியிடமும், மனைவியாக இருந்தால் கணவணிடமும் வாக்குவதாத்தை தவிர்ப்பது நல்லது. பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும். தேக ஆரோக்கியம் மற்றும் உடன் பழகும் நபர்களின் விஷயங்களிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
குழப்பம்
மேலதிகாரிகள் விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வேலை விஷயத்தில் சோம்பலைத் தவிர்ப்பது பெரிய வெற்றியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. தூக்கமின்மை தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
பிரச்சனைகள் நீங்கும்
குடும்பத்தில் உங்கள் துணைக்கும், உங்களுக்கும் இருந்து வந்த பிரச்சனைகள், மனத் தாங்கல்கள் பரிபூரணமாக நீங்கும். பெற்றோர், பெரியோருடன் இருந்த மனக்கசப்புகள், பிரச்சனைகளை சரியாகும். குடும்பத்தில் மகிழச்சியான சூழல் ஏற்படும். மிதுன ராசியினர் இருக்கும் வீடுகளில் நிச்சயமாக சுப காரியங்கள் நடக்கும். நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
நிதானம், பொறுமை
இந்த ஆனி மாதம் முழுவதிலும் தேக ஆரோக்கியத்திலும், வாகனம் தொடர்பான விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களிடம் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. அதிரடியாக முடிவெடுப்பதைத் தவிர்த்து பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிப்பது நன்மையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications