விருச்சிக ராசிக்கு நல்ல நேரம் ஸ்டார்ட்.. பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் பலன்.. இனி தொட்டதெல்லாம் ஹிட்டு
வார ராசி பலன்: ஆனி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான அதாவது ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிக ராசி பலன்
யோக பலத்தை அதிக அளவில் பெறக்கூடிய ராசி விருச்சிக ராசியினர். விஷ்ணு வழிபாடு, பள்ளி கொண்ட பெருமாளை வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்த அனைத்து விதமான தடைகளும் இன்றும் பெரிதாகக் கூடிய வாய்ப்புள்ளதால் கவனமாத இருக்க வேண்டும். ரகசியத்தை பரம ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது.
ஆரோக்கியம்
கோபம், ஆவேசம் உங்களை சட்ட சிக்கல் வரை கொண்டு சென்றுவிடும் வாய்ப்புள்ளது.வண்டி, வாகனங்கள் விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முதுகு, கழுத்து, நரம்பு பாதிப்புகள் தொடர்பான விஷயங்களில் நல்ல மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோக ரீதியாக இருந்து வந்த தடைகளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அனுகூலம்
தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள், பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். குடும்பத்தில் சந்தோஷமும், லாபமும் ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். மன அழுத்தத்தை விட்டு விடுவது நல்லது.
லாபம், சந்தோஷம்
அரசுத் துறை, அரசியல்வாதிகளாக இருப்பவர்கள் தேவையில்லாத அவப்பெயர், சங்கடத்துக்கோ ஆட்படுத்தும் சூழல் உண்டாகும். அதற்கெல்லாம் பதற்றப்படாமல் பொறுமையாக செயல்படுவது நல்லது. யோக பலத்தை அதிக அளவில் பெறும் காலகட்டமாக இருக்கும். லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும். இடமாற்றங்கள் வந்தால் தவறாமல் எடுத்துக் கொள்வது நல்லது.
சொத்துகள் வாங்கும் யோகம்
கொடுத்த வாக்குகளை சமுதாயத்திலும், வீட்டிலும் காப்பாற்றக்கூடிய நல்ல காலகட்டம். அசையும், அசையாப் பொருள்களை வாங்குவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். அதனால், குடும்பத்தில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. வியாபாரத்தில் காணப்பட்டு வந்த பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். வழக்குகள், வரி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications