Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது
Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசியினருக்கு யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய நல்ல காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றங்கள் காணப்படும். புதிய அறிமுகத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஜாக்கிரதையாக இல்லையென்றால் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படும்.
முன்னேற்றம்
நண்பர்கள், உறவினர்கள் விஷயத்தில் கவனம் தேவை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றம், அனுகூலம் காணப்படும். பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் இனி அடுத்தடுத்து நடக்கும். துணை விஷயத்தில், காதல் அமைப்பில் ஏற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த காலகட்மாக இருக்கும்.
பணவரவு
சந்திரனும், கேதுவும் இணைவதால் மனசஞ்சலங்கள் ஏற்படும். மனதில் ஒருவிதமான கஷ்டங்கள் ஏற்படும். விரக்தி மனப்பான்மை ஏற்படும். லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் அமர்ந்திருப்பதால் பண வரவு அற்புதமாக இருக்கம். அரசு ஆர்டர்கள், மருத்துவம் தொடர்பான விஷயங்களில் நல்லவை நடக்கும். பத்திரிகைத் துறை, பத்திரப் பதிவுத் துறையில் நிறைய நன்மைகள் நடக்கும்.
புத்திசாலித்தனம்
உங்கள் லாப ஸ்தானம், 10 ஆம் இடம் பாதிக்கப்படுவதால் வேலையில் பிரச்சனை, வேலை ஆட்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எலக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அறிவுக்கூர்மை, புத்திசாலித்தனம் அதிகரிக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும் யோகம் உண்டாகும். நிறைய விஷயங்கள் பாசிட்டிவாக நடக்கும். வரதராஜப் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம், பொருளாதாரம் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications