மகரத்துக்கு இனி தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது.. சில விஷயங்களில் ரொம்ப ஜாக்கிரதை
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை அதாவது ஆனி 2 இல் இருந்து 8 வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் புதன்கிழமைகளில் மனதிற்குப் பிடித்த தெய்வ வழிபாடுகள் செய்வது ஏற்றத்தையும், நம்பிக்கையையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். பெருமாள் வழிபாடு சகல விதத்திலும் நன்மையைத் தரும். படிப்பு தடை, உத்தியோகத் தடை, வியாபாரத் தடை, தொழில் தடைகள் எல்லாம் நீங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
8 ஆம் இடத்தில் கேது இருப்பதால் நரம்பு பிரச்சனைகள், முதுகு தண்டுவடம், தலைவலி தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது. புதன்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவளிப்பதால் பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கக்கூடிய அமைப்பு உண்டாகும். குடும்பத்தில் ஆனந்தம் உண்டாகும். உத்தியோகம், தொழில், படிப்பு, வியாபாரம் ரீதியாக பெரிய அளவுக்கு வெற்றியை ஏற்படுத்தும்.
வெற்றி மேல் வெற்றி
யோகத்தை அதிகமாகப் பெறக்கூடிய ராசியினர் நீங்கள். தொழிலில் எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதில் மிகப்பெரிய வெற்றியும், சந்தோஷமும் உண்டாகும். புதிய தொழில் மாற்றத்திற்காக தயாராக இருக்கக்கூடியவர்கள், நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருப்பவர்களுக்கு இனி அற்புதமான காலகட்டமாக இருக்கும். அனைத்துவித மாற்றமும், ஜெயமும் உண்டாகும்.
தடைகள் நீங்கும்
பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். அரசுத் துறை அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய நன்மைகளும், சந்தோஷங்களும் ஏற்படுவதை கண்கூடாகப் பார்க்காலம். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரண நிவர்த்தியை ஏற்படுத்தும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்ற விஷயத்தில் பெரியளவுக்கு சந்தோஷங்கள் கைகொடுக்கக் கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.
வாகனங்களில் ஜாக்கிரதை
நல்ல நல்ல விஷயங்களுக்கு தைரியமாக இறங்கி பெரிய வெற்றிய யும், சந்தோஷத்தையும் பெற்றுக் கொள்வது நல்லது. சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் வித்தைகள் காட்டுவதை தவிர்ப்பது நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications