"கவலைக்கு எல்லாம் டாடா".. மிதுனம், கடக ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம்.. வாழ்க்கையே மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: சித்திரை 22 முதல் 28 வரையிலான மே 5 முதல் 11 ஆம் தேதி வரை மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Weekly rasi palan Lucky zodiac signs

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான அமைப்பு. யோகமும் அனுகூலமும் காணப்படும். அடிவயிறு, கழிவுப் பாதையில் கவனமாக இருக்க வேண்டும். முருகர் வழிபாடு நம்பிக்கை, சந்தோஷத்தை தரும். சுப்பிரமணிய புஜங்கம் கேட்டுக் கொண்டே இருப்பது நல்லது. பண நெருக்கடி, கடன் நெருக்கடி, தேக ஆரோக்கிய நெருக்கடி எல்லாம் பறந்து போகும்.

தைரியம் ஏற்படும் காலகட்டம். அதிகார அமைப்பு ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றங்கள் உண்டாகும். மேலதிகாரிகளின் நம்பிக்கை கிடைக்கும். தொலைத்தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய அமைப்பு. யோகமும், அனுகூலமும் ஒன்று சேரக்கூடிய அதி அற்புதமான அமைப்பு உண்டாகும்.

தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நீண்ட நாட்களாக தாய் வழி, தந்தை வழி உறவில் இருந்த மனத் தாங்கல்கள் படிப்படியாக குறையும், இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம், மனை மாற்றம், படிப்பு மாற்றம் எல்லாவற்றிலும் கண்டிப்பாக ஏற்றம் ஏற்படும்.

பிள்ளைகளுடன் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் திடீரென மீடியாவில் புகழ் பெறக்கூடிய பிராப்தம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் இருந்த சிக்கல்கள் தீரும். ஏற்றம் பெறுவீர்கள். தொழில் அமையும். பெற்றோர், பெரியோருடன் மனம் விட்டுப் பேசுவது நன்மையை ஏற்படுத்தும்.

கடகம்

வயிறு, ஹீமோகுளோபின், ஹார்மோன் இம்பேலன்ஸ் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் ஏற்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகொடுக்கும். தொழில் ரீதியாக சிக்கல்கள் தீரக்கூடிய நல்ல காலகட்டம். பிள்ளைகள் வாழ்க்கையில் தடைப்பட்டிருந்த தடங்கல்கள் தவிடு பொடியாகும்.

பண வரவில் இருந்த மன அழுத்தம் தீரக்கூடிய நல்ல காலகட்டம். புதிய கூட்டாளிகள் கிடைக்கக்கூடிய அமைப்பு ஏற்படும். நல்ல துணை, நல்ல கூட்டாளிகள், நண்பர்கள் என்று புது வட்டாரத்திற்குள் மாறக்கூடிய அமைப்பு ஏற்படும். வார்த்தைக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்படுவது கண்கூடாகப் பார்க்கலாம். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் ஜெயத்தை ஏற்படுத்தும்.

இழுபறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறும். பெண்களுக்கு அற்புதத்தையும், சந்தோஷமும், திடீர் யோக பலனும் கிடைக்கும். அசையும், அசையா பொருள் சேர்க்கை ஆனந்தத்தை ஏற்படுத்தி தரும். விநாயகர் வழிபாடு பெரிய நம்பிக்கை, பெரிய சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். பிள்ளைகள் விஷயத்தில் பூதக் கண்ணாடி ஆராய்ச்சியை தவிர்ப்பது நல்லது. அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது.

வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், சுற்றுலா, நண்பர்கள், உறவினர்கள் என்று அற்புதமான கைங்கரியத்திற்கு செல்லக்கூடிய பிராப்தம் ஏற்படும். அமோகமான காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+