வார ராசி பலன்: கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு கிடைக்கும் பலன்கள்.. இந்த வாரம் எப்படி?

Subscribe to Oneindia Tamil

Weekly rasi palan: மார்ச் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம்: கடக ராசிக்காரர்கள் யோக பலன்களை அதிக அளவில் பெறக் கூடியவர்கள். இடமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து மாற்றங்களுக்கும் தயாராகிக் கொள்வது நன்மையான சூழலைத் தரும். திடீரென மேலதிகாரிகள் பேசுவது மன சங்கடத்தை ஏற்படுத்தும். உணர்ச்சிவசப்பட்டு தர்க்கம் செய்வது, வேலையை விடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது உங்களை தனிமைப்படுத்தி விடும். நிதானமாக, ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

Weekly rasi palan Astrology

அலர்ஜி, சளி தொந்தரவு ஏற்படும். துர்கை வழிபாடு பல விதத்தில் நன்மை மற்றும் சந்தோஷத்தை ஏற்படுத்தும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி இருவரது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து செயல்படுவது நல்லது. தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் படிப்படியாக குறையும்.

பெரிய பொறுப்புகள் இழுபறியாவதால் கோபப்படுவது, உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. பயணங்கள் சமயத்தில் புதிய அறிமுகத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒற்றை தலைவலி, காது மூக்கு தொண்டை பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். குளிர்ச்சியான பொருள்களால் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கவனம். இழுபறியாக இருந்த நிலைமை மாறி அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். தலைவலி, நரம்பு பிரச்சனையில் எச்சரிக்கை தேவை. அனுமனை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். தொழில் ரீதியாக தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது. சட்டத்துக்குப் புறம்பானவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. உணர்ச்சிவசப்படுவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த பாதிப்புகளில் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் அனுகூலத்தை தரும். தர்க்கத்தை தவிர்ப்பது, நேர மேலாண்மை நன்மை பயக்கும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள் அனுகூலத்தை தரும். தொழில் ரீதியாக முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும். துணையிடமிருந்த மனத் தாங்கல்கள் படிப்படியாக குறையும்.

எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். லாபம் பன்மடங்காக உயரும். மிகப்பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய காலகட்டமாக இருக்கும். சனி அஷ்டமத்தில் இருப்பதால் சுறுசுறுப்பாக இருப்பது நல்லது. தோப்புக்கரணம் போட்டு நாளை தொடங்குவது நல்லது. பெற்றோர், பெரியோருக்கு அனுகூலம் உண்டாகும். அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிஅற்புதம் நடக்கும். நிலம் வாங்குவது, விற்பதில் இருந்து வந்த சிக்கல்களில் இருந்து பரிபூரண நிவர்த்தி உண்டாகும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. பெருமாள் வழிபாடு நல்ல பலன்களைத் தரும். முதுகுத் தண்டுவடம், கழிவுப் பாதை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் அனுகூலத்தை காண்பீர்கள். பிறர் குடும்ப விஷயத்தில் உங்கள் தலையீடு, உங்கள் குடும்ப விஷயத்தில் பிறர் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி உடல்நிலையில் கவனம் தேவை.

தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் நன்மையை ஏற்படுத்தும். எதிரிகள் விஷயத்தில் பதட்டங்கள் குறையும். எதிரிகளுக்கு பதட்டங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். திருமணத்தில் பாதிப்பாகி மறுமணத்தில் இருப்பவர்கள் கூட அதீத கவனத்தோடு இருப்பது நல்லது.

காதலில் இருப்பவர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு, வாக்கு ஸ்தானதிபதியான சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால் கனிவான பேச்சை பேசுவது நல்லது. பசுமாடுகளுக்கு உணவளிப்பது நல்ல பலன்களைத் தரும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் கைகொடுக்கும். தன்னம்பிக்கை, தைரியத்தை உண்டாக்கும். புதிய அறிமுகங்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+