தனுசு ராசிக்கு ஜாக்பாட் வாரம்... தடைப்பட்ட காரியங்கள் முடியும்; அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்!

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Dhanusu lucky zodiac signs weekly rasi palan

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு அற்புதமான காலகட்டம். சூரியனுடைய பலமும், பார்வையும் இருப்பதால் எல்லா விஷயங்களையும் மிகவும் எளிமையாக முடிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மற்றவர்கள் மூலமாக நமக்கு லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் அதன் மூலமாக ஆதாயம் உண்டாகும். அடிவயிறு, கழிவுப் பாதை, மலக்குடல், கிட்னி தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

குடும்பம்

பெரியளவில் நன்மைகள் நடக்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். குடும்பத்தாருடன் தர்க்கம், வாக்குவாதங்கள் வைத்துக் கொள்ளாமல் இருப்பத நல்லது. குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரிகள் விஷயத்தில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும்.

யோக பலன்

பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். வண்டி வாகனங்களில் மாற்றங்களை செய்வீர்கள். உறவுமுறையில் இருந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரண நிவர்த்தியாகும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் நல்ல காலகட்டம். தனிப்பட்ட வகையில் செல்வாக்கு கூடும். வசந்தமும், அனுகூலம் ஏற்படும் நல்ல அமைப்பு. உறவுமுறையில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

ஆரோக்கியம்

புதன் வக்கிரமாக இருப்பதால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, குடல் பிரச்சனை வரும் வாய்ப்புள்ளது. கம்யூனிகேஸ்ஷனில் நிறைய தவறுகள், கோளாறுகள் வரும் வாய்ப்புள்ளது. தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளதால் கவனம் தேவை. இருப்பினும், உங்களுக்கு நிறைய ஆதாயங்கள் உண்டாகும்.

வழிபாடு

4 ஆம் இடத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்கள் மூலமாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். கம்யூனிகேஷனில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தள்ளிப்போகும் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் அடுத்தடுத்து நடக்கும். எந்த விஷயத்தை திட்டமிட்டாலும் அதனை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. சிவபெருமான் வழிபாடு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 தவீதம் நன்றாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+