பண மழை கொட்டும்.. ஆண்டியும் அரசன் ஆகலாம்! சிம்ம ராசிக்கு 2024ன் கடைசி 3 மாதங்கள் எப்படி இருக்கும்?
சென்னை: 2024ம் ஆண்டில் சிம்ம ராசிக்கு அடுத்த 3 மாதங்கள் எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்..
அக்டோபர் மாதம்: அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். குரு பெயர்ச்சி மற்றும் அதன் வக்ர பெயர்ச்சி பொதுவாக பல விதமான மாற்றங்களை பல ராசிகாரர்களுக்கு ஏற்படுத்தும். சுப செலவு இருக்கிறது என்பதால் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எந்த விதமான முதலீடுகளையும் செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள். மண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே கசப்பான உறவு ஏற்படலாம். அதனால் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு. தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்கவும். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்கள் வேலையில் நல்ல கவனத்துடன் இருக்கவும். இல்லையென்றால் வேலை போகும் ஆபத்தும் உள்ளது.
வேலை இருந்தால் நல்ல சம்பளம் இல்லை, சம்பளம் இருந்தாலும் 10 நாளைக்குதான் நிற்கிறது மீதம் மாதத்தில் 20 நாட்கள் கையில் பணம் இல்லை என்ற நிலைதான் இருக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு கடன் தொல்லை, சொத்துக்களை இழந்தது, நிலத்தை இழந்தது என்று எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடந்துவிட்டது. அதிலும் ஆரோக்கிய ரீதியாக நீங்கள் படாத கஷ்டம் இல்லை. காதலில், திருமண உறவில் கூட மிக மோசமான சூழ்நிலை உங்களுக்கு இருந்தது. இனி அந்த நிலை இருக்காது.
நவம்பர் மாதம்: உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும். இரண்டாவது குழந்தைக்கு முயல்பவர்களுக்கு இரண்டாம் குழந்தை கிடைக்கும். திருமணம் கைகூடும். இத்தனை காலம் பல வரன்களை தேடி இருப்பீர்கள். ஏதாவது ஒரு பெண் - ஆண் அமையாதா என்று பார்த்து இருப்பீர்கள். ஆனால் இப்போது நீங்கள் தேடாமலேயே உங்களுக்கு திருமணம் கைகூடும்.
புதிய வீடு கட்டும் வாய்ப்பு வரும்., நிலம் வாங்கும் யோகம் அடிக்கும். சொத்துக்களுக்கு அதிபதி ஆகும் வாய்ப்பு தேடி வரும். எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். அதாவது திருமணத்திலோ, வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே புரட்டி போடும்.
டிசம்பர் மாதம்: திருமண வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும் . இத்தனை காலம் மன வாழ்க்கையில் நிலவிய மோதல்கள் முடிவிற்கு வரும். மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழும் வாய்ப்பு கிடைக்கும். படிப்பில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும். குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். போக்குவரத்தில் கவனமாக இருங்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளதால் கவனமாக இருக்கவும். பங்காளிகள் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம்.
வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். அப்பா உடன் இருந்த பிணக்கு சரியாகும். குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்கள் தீரும்.












Click it and Unblock the Notifications