உங்க ராசி என்னன்னு சொல்லுங்க... நீங்க என்ன படிக்கலாம்னு நாங்க சொல்றோம்

டாக்டர், இன்ஜினியர் ஆவதற்கும் ஒரு ராசி வேண்டும் என்பார்கள். டாக்டர், இன்ஜினியர் மட்டுமே படிப்பு அல்ல ஊடகத்துறை, பைன் ஆர்ட்ஸ், கேட்டரிங், கார்மென்ட்ஸ் டிசைனிங், விவசாயம், ஆசிரியர் என பல துறைகள் உள்ளன.

Subscribe to Oneindia Tamil

மதுரை: எஸ்எஸ்எல்சி, ப்ளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்க தயாராகி வருகின்றனர். நீட் கோச்சிங் சென்டரிலும் ஜேஇஇ சென்டரிலும் லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து சேர்த்து விட்டும் பலரால் பாஸ் செய்ய முடியாமல் போகிறது இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேற்படிப்புக்கு செல்லும் முன்பாக நம் பிள்ளைகளுக்கு எந்த படிப்பு சரியாக இருக்கும் என்று ஜாதகத்தை பார்த்து முடிவு செய்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு எந்த படிப்பு படிக்கலாம் என்று தேர்வு செய்து படிக்கலாம்.

படிப்புக்கும் ராசிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று யோசிக்கலாம். ராசியை ஆட்சி செய்யும் கிரகங்கள், நமது ஜாதகத்தில் பலமாக இருக்கும் கிரகங்கள், லக்னாதிபதி ஆகியவைகளின் சஞ்சாரம், கிரகங்களின் கூட்டணியை பொறுத்து நாம் படிக்கப் போகும் படிப்பையும் தேர்வு செய்யலாம். ஜோதிட ரீதியாக தொழில் ஸ்தானமான 10ஆம் இடம் எந்த ராசிக்காரருக்கு எந்தத் தொழில் நன்றாக வருமோ அந்தத் தொழிலுக்குத் தொடர்புடைய படிப்பைத் தேர்வுசெய்து படிக்கலாம்.

ஒரு சிலர் படித்த படிப்புக்கும் பார்க்கிற வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கும். காரணம் எதையோ படித்து படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கடைசியில் கிடைத்த வேலையை பார்ப்பார்கள். எனவேதான் பிள்ளைக்கள் பிடிக்காமல் படிக்கும் படிப்புக்காக லட்சக்கணக்கில் செலவு செய்யாமல் அவர்களுக்கு பிடித்த படிப்பை படிக்க வைக்க குறைந்த அளவு பணத்தையே செலவு செய்யலாம். ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் பலமாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். தசாபுத்தி, கோச்சார ரீதியாகவும் கிரகங்களின் சஞ்சாரத்தையும் பார்த்து படிக்க வேண்டும். நம்முடைய ஆசைகளை பிள்ளைகளின் மீது திணிக்கக் கூடாது. என்ன திறமை இருக்கிறதோ அதற்கேற்ப அவர்களை படிக்க வைக்க வேண்டும்.

மேஷம் - விருச்சிகம்

மேஷம் - விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு நீங்கள் முதலில் தேர்வு செய்வது ஏதாவது ஒரு டிகிரி படிக்கலாம். காரணம் செவ்வாய்க்கு காவல்துறை, தீயணைப்புத்துறை, ராணுவம் போன்ற வேலைகள் ஈசியாக கிடைக்கும். உயர் அதிகாரிகளாக வேண்டும் என்று விரும்புபவர்கள் ஏரோநேட்டிகல், மெரைன், விமானம், கப்பல் துறை சார்ந்த படிக்கலாம். ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவதற்காக ஆர்ட்ஸ், சயின்ஸ் படித்து அரசு தேர்வுகள், சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுதலாம்.

விருச்சிகம் ராசிக்காரர்கள் மறைவாக இருக்கும் எதையும் கண்டுபிடிப்பவர்கள். ரகசிய நோய்களை கண்டுபிடிக்கும் பலம் அவர்களுக்கு உண்டு என்பதால் நீட் தேர்வு எழுதி மருத்துவ துறை சார்ந்த படிப்புகளை படிக்கலாம். டாக்டர் ஆக வசதி இல்லாதவர்கள் லேப் டெக்னீசியன் பார்மா, படிக்கலாம்.

 ரிஷபம் - துலாம்

ரிஷபம் - துலாம்

சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்ட ரிஷபம் துலாம் ராசிக்காரர்களே அழகு சார்ந்த துறைகளை தேர்வு செய்யலாம். ஆட்டோமொபைல் துறை, டீச்சர், பிலிம் டெக்னாலஜி, மீடியா, பியூட்டிசியன், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கார்மென்ட்ஸ் மேனேஜ்மென்ட் சார்ந்த துறைகளை படிக்கவும். துலாம் ராசிக்காரர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சார்ந்த படிப்புகளை படிக்கலாம். கணினித்துறை, மார்க்கெட்டிங் தொடர்பான படிப்புகளை தேர்வு செய்யலாம். சினிமா இயக்குநர், கேமராமேன், ஐடி துறை வேலைக்கு செல்வதற்கான படிப்புகளை படிக்கலாம்.

மிதுனம் - கன்னி

மிதுனம் - கன்னி

புதனை ஆட்சிநாதனாகக் கொண்ட மிதுனம், கன்னி ராசிக்காரர்களே...ஜோதிடத்துறை, ஊடகத்துறை சார்ந்த படிப்புகளை படிக்கலாம். பி காம், சிஏ என ஆடிட்டிங் துறை சார்ந்த படிப்புகளை படிக்கலாம். மைக்ரோ லெவல் டெக்னாலஜி படிக்கலாம். கன்னி ராசிக்காரர்கள் ஆசிரியர் ஆகலாம். கணித ஆசிரியர் படிப்பு படிக்கலாம். பத்திரிகை துறை, எழுத்தாளராகவும் வேலை செய்யலாம்.

கடகம்

கடகம்

சந்திரன் ஆட்சி நாதன். சந்திரன் உச்சம் பெற்றவர்கள் குரு பார்வை பெற்றவர்கள் கடல் சார்ந்த படிப்புகள் படிக்கலாம். ஃபுட் புராசஸிங் படிக்கலாம். விவசாயம் பிஎஸ்சி அக்ரி படிக்கலாம் மீன் வளத்துறை படிப்புகளையும் படிக்கலாம். சந்திரன் பலமாக இருப்பவர்கள் மெரைன் இஞ்சினியரிங் படிக்கலாம்.

 சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே... அரசு கிரகம் என்பதால் அரசு துறை சார்ந்த வேலைக்காக படிக்கலாம். கலைத்துறை சார்ந்த படிப்புகளை படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் சார்ந்த படிப்புகள் டாக்டர், அறுவை சிகிச்சை நிபுணர் ஆக லாம், சோசியாலஜி, பொலிட்டிக்கல் சைன்ஸ் படிக்கலாம்.

 தனுசு - மீனம்

தனுசு - மீனம்

மதம் சார்ந்த படிப்புகள், வேத பாட சாலைகள் படிக்கலாம், ஒன்பதாம் இடத்தில் இருக்கும் கிரகத்தின் அமைப்பை பொறுத்து படிப்பு அமையும். ஆசிரியர் வேலைக்கு படிக்கலாம், ஆடிட்டிங் தொழில் செய்யலாம். நம்முடைய மூததையர் செய்த தொழிலை செய்யும் போது நாம் கண்டிப்பாக சக்ஸஸ் ஆகலாம்.

மீனம் ராசிக்காரர்கள் வேத பாடசாலை, வங்கித்துறை வேலைக்கு செல்வதற்கான படிப்புகளை படிக்கலாம். சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக படிக்கலாம்.

 மகரம் - கும்பம்

மகரம் - கும்பம்


மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு சனி பகவானை ஆதிக்க நாதனாகக் கொண்டவர்கள். இவர்கள் கடும் உழைப்பாளிகள். பொறியியல் துறை சார்ந்த படிப்புகள் குறிப்பாக சிவில் இன்ஜினியர், ஆர்க்கிடெக்சர் படிப்புகளை படிக்கலாம். அரசியல் அறிவியல் படித்தாலும் சக்சஸ் ஆகலாம்.

கும்பம் ராசிக்காரர்கள் ஆராய்ச்சி சார்ந்த படிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் ஆகலாம், பிசிக்ஸ் பிஎச்டி படிக்கலாம். கெமிக்கல் இன்ஜினியரிங், பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+