30 வயதுக்குள் கோடீஸ்வரராகும் யோகம் உள்ள 3 ராசிகள் யார் தெரியுமா?.. உங்க ராசி இருக்கானு பாருங்க
சென்னை: ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசியினருக்கு தங்களது திறமையால் 30 வயதுக்குள் கோடீஸ்வரராகும் யோகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்..
எப்படியாவது வாழக்கையில் முன்னேறிவிட வேண்டும். பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் நம் எல்லோருக்குமே இருக்கும். சிலர் பிறக்கும்போதே கோடீஸ்வர குடும்பத்தில் பிறப்பார்கள். சிலர் தங்களது திறமையால் போராடி பணக்காரர்கள் ஆவார்கள். சில ராசிக்காரர்கள் தங்களது 30 வயதுக்குள் கோடீஸ்வரராகும் யோகம் பெறுவார்கள் என்று கூறுகிறது ஜோதிட சாஸ்திரம்.

இந்த ராசிக்காரர்கள் தங்களது திறமையால் இளம் வயதிலேயே பணக்காரர்களாகும் யோகம் உள்ளதாம். 30 வயதுக்குள் கோடீஸ்வரராகும் யோகம் பெறும் அந்த ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம்: கோடீஸ்வர யோகம் பெறும் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பவர்கள் மகர ராசிக்காரர்கள் தான். ராசியதிபதியாக சனி இருப்பதால் தொடர்ந்து பணியாற்றக் கூடியவர்கள். பொறுமையுடனும், சிறப்பாகவும் திட்டமிட்டு வாழக் கூடியவர்களாக இருப்பீர்கள். தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியால் தனக்கென தனி ராஜ்ஜியத்தை உருவாக்கும் திறமை படைத்தவர்களாக இருப்பீர்கள்.
இப்படி ஆகிவிடுவோம் அப்படி ஆகிவிடுவோம் என்று வெறும் கனவுகளை மட்டும் கண்டு கொண்டிருக்காமல் அதனை நனவாக்கு வெற்றி காண்பதில் உறுதியாக இருப்பவர்கள். முழு ஈடுபாட்டுடன் கடினமாக உழைத்து 30 வயதிற்குள்ளேயே கோடீஸ்வரராகும் யோகம் உங்களுக்கு உண்டு.
விருச்சிகம்: கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் இருக்கக் கூடியவர்களாகவும், அதீத உள்ளுணர்வு கொண்டவர்களாகவும் இருப்பவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். வெறும் ஆசைமட்டும் படாமல் தங்களுக்கு வேண்டியதை கடினமாக உழைத்து சாதிக்கக் கூடியவர்கள். தாங்கள் ஆசைப்பட்டதை எப்படி அடைய வேண்டும் எனும் வித்தையை கற்றறிந்தவர்களாக இருப்பீர்கள்.
உங்களுடைய அணுகுமுறை, பேச்சு, முதலீடுகள், புத்திசாலித்தனமான நடவடிக்கையால் எல்லா இடங்களிலும் சிறந்து விளங்கக் கூடியவர்களாக இருப்பீர்கள். பொதுவாக நீங்கள் எந்தவொரு கடினமான ரிஸ்குகளையும் எடுக்கத் தயாங்கமால் இருப்பதால் இளைஞர்களாக இருக்கும்போதே கோடீஸ்வரர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ரிஷபம்: அழகு, செல்வம், புகழ், ஆடம்பரத்துக்கு அதிபதியான சுக்கிர பகவான் அதிபதியாக உள்ள ரிஷப ராசிக்காரர்களே, இயற்கையாகவே நீங்கள் செல்வத்துடன் தொடர்புடையவர்களாக இருப்பீர்கள். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் அல்லது கலைத் துறைகளில் சிறந்து விங்குவீர்கள். அதில் திறமை படைத்தவர்களாக இருப்பீர்கள்.
பொறுமை, நல்ல அணுகுமுறையால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான திறன் படைத்தவர்களாக இருப்பீர்கள். இதன் மூலமாக இளம் வயதிலேயே நீங்கள் பணக்காரராக மாறும் யோகம் உண்டு. மற்ற ராசிக்காரர்களுடன் ஒப்பிடுகையில் ரிஷப ராசிக்காரர்கள் தங்களுடைய உழைப்பினால் பலனை அனுபவிக்கும் திறனை அடையக் கூடியவர்களாக இருப்பீர்கள். இதுதான் மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும் விஷயமாக இருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications