மகர ராசிக்கு டாப் கிளாஸ் மாற்றம்.. இனி அடிக்கிறதெல்லாம் ஜாக்பாட் தான்.. செப்டம்பர் வரை கவனம்
தமிழ் புத்தாண்டு: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. மகர ராசிக்காரர்களுக்கு 4 முக்கிய கிரகங்களின் சேர்க்கையால் இந்த ஆண்டு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மகர ராசி இரண்டே விஷயங்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். வாக்கு கொடுப்பது, தான் யார் தெரியுமா என்ற பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 3 ஆம் இடத்தில் சனி, ராகு, சுக்கிரன், புதன் அமர்ந்துள்ளது. இளைய சகோதரன், சகோதரிகள் மூலமாக நிறைய பிரச்சனைகள், வாக்குவாதங்கள், சண்டைகள், பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

மனதில் சண்டை போடும் எண்ணத்தை அதிகரிக்கும். நாம் அமைதியாக இருந்தாலும் இளைய சகோதரி, சகோதரர்கள், மாமனாரால் சண்டை வருவதற்கான வாய்ப்புள்ளது. வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மே 20 வரைக்கும் தான் இந்த நிலைமை இருக்கும். மே 20 ஆம் தேதிக்குப் பிறகு உங்களுக்கு பொற்காலம் உண்டாகும்.
2 ஆம் இடத்துக்கு ராகு வருவதால் குரு பார்வையும் கிடைப்பதால் வெற்றி உண்டாகும். ராகுவால் பெரிய ஏற்றம் ஏற்படும். மகரத்துக்கு கடந்த ஒரு ஆண்டுகளில் நிறைய பேருக்கு திருமணம், குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கும். நிறைய சுப காரியங்களுக்கு சென்றிருப்பீர்கள்.
6 ஆம் இடத்தில் குரு அமருவதால் வயிறு சார்ந்த பிரச்சனை ஏற்படும். சில விஷயங்களில் கடனை அதிகப்படுத்தும். அதிக வட்டிக்கு வாங்கியிருக்கும் கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் எல்லாவற்றையும் கட்டி முடிப்பீர்கள். 10 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் அங்கீகாரம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் குரு பார்வை இருப்பதால் அமோகமான காலகட்டமாக இருக்கும்.
3 ஆம் இடம், 6 ஆம் இடம் இணைவதால் மனதளவில் சில பிரச்சனைகள் ஏற்படும் . படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் இரண்டாம் முறை ஜெயிக்கும் நிலை உண்டாகும். சமசப்தமத்தில் கேது அமர்ந்துள்ளது. சூரியன், கேது இணைவதால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெரியவர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வது நல்லது.
ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு உங்களுக்கு பெரிய ஏற்றம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். நினைத்தது நடக்கும். தொழிலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். பணம் பொருளாதாரத்தில் நல்ல மேன்மை உண்டாகும்.
சுப்பிரமணிய சுவாமியை வழிபாடு செய்வது நல்லது. மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். மே மாதம் வரை மனதில் சில தவறான எண்ணங்கள் ஏற்படும். அதில் கவனம் தேவை. தினந்தோறும் தியானம் செய்வது, கோயிலுக்குச் செல்வது நல்லது. சந்தோஷத்தின் அடிப்படையில் 70 சதவீதமும், பொருளாதாரத்தின் அடிப்படையில் 90 சதவீத நற்பலன்களும் கிடைக்கும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications