சனி குருவின் மாற்றத்தால் பிப்ரவரியில் மேஷம் முதல் சிம்மம் ராசியினர் பெறும் பலன்கள்?..முழு விவரம் இதோ
பிப்ரவரி மாத ராசி பலன்: பிப்ரவரி மாதத்தில் சனி குருவின் மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டங்களை பெறப் போகின்றனர். மேஷம் முதல் சிம்மம் ராசி வரை பெறப்போகும் பலன்கள் மற்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
பிப்ரவரி மாதத்தில் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த மாதம் கிரகங்களில் மிக முக்கியமான கிரகமான சனி பகவான் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அதேசமயம் குரு பகவானும் வக்ர நிவர்த்தி அடைகிறார். பிப்ரவரி மாதத்தில் நடக்கும் குரு வக்ர நிவர்த்தி, சனி நட்சத்திர பெயர்ச்சி உள்ளிட்ட முக்கிய கிரக பெயர்ச்சிகளின் தாக்கத்தால் அனைத்து ராசிகளும் மாற்றங்களை அனுபவிப்பார்கள். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் கிரகங்களின் மாற்றத்தால் பல்வேறு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான சூழல்கள் உருவாகும். தொழில், வியாபாரம், வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணியாற்றும் சக ஊழியர்களிடம் இணக்கமான சூழல் ஏற்படும். உறவினர்கள், வியாபார கூட்டாளியுடன் நல்ல உறவுகள் இருக்கும். திட்டமிட்டபடி எதிர்காலத்தை நோக்கி செயல்படத் தொடங்குவீர்கள்.
ரிஷபம்: உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காக பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும். புத்திக்கூர்மையால் நன்மை பயக்கும் விஷயங்களை செய்வீர்கள். குடும்பம் மற்றும் சமூகத்துடன் சிறப்பான தொடர்பு ஏற்படும். சமூகத்தில் உங்களால் முடிந்த மாற்றங்களைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுடைய பேச்சு, திறமையால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் உங்கள் வேலைகளால் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள். அவர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். பண வரவு கணிசமாக அதிகரிக்கும்.
மிதுனம்: பிப்ரவரி மாதத்தில் நடக்கும் முக்கிய கிரகங்களின் மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் மாதமாக இருக்கும். மாதத்தின் தொடக்கமே மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இரண்டாவது வாரத்தில் சில பிரச்சனைகள் வந்தாலும் அதில் இருந்து சீக்கிரமே மீண்டு வருவீர்கள். மீண்டும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரம், தொழில், வணிகத்தில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
கடகம்: பிப்ரவரி மாதத்தில் நிகழும் முக்கிய கிரகங்களின் மாற்றத்தால் கடக ராசிக்காரர்கள் அதிக அளவிலான அதிர்ஷ்டமான பலன்களை அனுபவிப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல சூழல் இருக்கும். அலுவலகத்தில் அளவுக்கு அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்கவும். பேச்சினால் பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான பொறுப்புகளை மற்றவர்களை நம்பி விட்டுத் செல்வதை தவிர்க்கவும். அதன் மூலமாகவும் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. சனிப்பெயர்ச்சி, குரு வக்கிர நிவர்த்திய அதிர்ஷ்டமான பலன்களைக் கொடுக்கும்.
சிம்மம்: சனி மற்றும் குருவின் மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்கள் செலவுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் வேலைகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் மூத்த அதிகாரிகள், சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். மாதத்தின் இரண்டாவது வாரத்தில் செலவுகள் செய்வதில் கவனம் செலுத்துவது நல்லது. அதிக பணிச்சுமை, மன அழுத்தம் உண்டாகும். மாதத்தின் நடுப் பகுதியில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் காண்பீர்கள். வியாபாரம், தொழில், வணிகத்தில் லாபத்தைக் காண்பீர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications