பாஸ்ட் டாக் வைத்து இருப்பவங்க.. காரை எடுக்கும் முன் இதை நோட் பண்ணுங்க.. 3 முக்கியமான அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுக்க பாஸ்ட் டாக்கில் 3 முக்கியமான மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

மாற்றம் 1: சுங்கவரி வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் விதிகளை அரசாங்கம் அவ்வப்போது மாற்றுகிறது. NPCI ஆகஸ்ட் மாதம் புதிய Fastag விதிகளை அமல்படுத்தியது. ஃபாஸ்டாக் பயனர்கள் இந்த புதிய விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.

automobile transport

இந்திய ரிசர்வ் வங்கி ஃபாஸ்டாக் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை இ-மேண்டேட் கட்டமைப்பில் சேர்த்துள்ளது. அதாவது இ மேன்டேட் எனப்படும் கட்டமைப்பில் இணைத்து உள்ளது. இது கிரெடிட் கார்டு ஆட்டோபேமெண்ட் போல. அதாவது உங்கள் பாஸ்ட் டாக் கார்டில் பணம் தீர்ந்தவுடன்.. அது மினிமம் பேலன்சுக்கு கீழே வந்தவுடன்.. தானாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் இதில் சேர்க்கப்படும்.

அதாவது நெட்ப்ளிக்ஸ் போன்ற பக்கங்களில் எப்படி தானாக ரீ சார்ஜ் ஆகிறதோ அப்படி. இதற்கு நீங்கள் இ-மேண்டேட் அனுமதி மட்டும் கொடுக்க வேண்டும். அதை கொடுத்தால் போதும் இனி ஒவ்வொரு முறையும் உங்கள் Fastag யை ரீ சார்ஜ் செய்ய வேண்டாம். Fastagக்கிற்கு இ-மேண்டேட் தருவது தற்போது கட்டாயம் ஆகி உள்ளது.

உங்கள் பாஸ்ட்டாக்கில் உள்ள தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட குறைந்தவுடன் இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணத்தைக் கழித்து அதில் சேர்க்கும்.இதனால் பயனர் மீண்டும் மீண்டும் Fastag ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. மொத்தத்தில், வாடிக்கையாளர்களுக்கு பாஸ்டாக் ரீசார்ஜ் செய்யும் தொல்லை இனி இல்லை.

மாற்றம் 2: தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்த நிலையில் இதில் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை வந்த பின்பே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அதை அமல்படுத்த 3 அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அறிவிப்பு 1: பாஸ்ட் டாக் 5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதை உடனே நீக்க வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.

அறிவிப்பு 2 : பாஸ்ட் டாக் 3 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டால் அதில் உடனே கேஒய்சி மாற்ற வேண்டும். அதை மாற்ற அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது.

அறிவிப்பு 3 - பாஸ்ட் டேக் வாகனத்தின் முன் ஒட்டப்பட வேண்டும். இல்லையென்றால் இரட்டை தொகை கட்ட வேண்டும்.

மாற்றம் 3: விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

சமீபத்தில், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு காலத்தை குறைப்பது மற்றும் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி நேரத்தை எளிதாக்குவது போன்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உலக வங்கியிடம் பல விவரங்களை தெரிவித்தது. FASTag செயல்படுத்தப்பட்டதன் மூலம், சுங்கச்சாவடிகளில் சராசரி காத்திருப்பு நேரம் வியத்தகு முறையில் குறைந்துள்ளது. தற்போது காத்திருப்பு நேரம் வெறும் 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது, இது முந்தைய 714-வினாடி காத்திருப்பில் இருந்து கணிசமான முன்னேற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+