ஒரே நாளில்.. தமிழ்நாடு டிராபிக்கில் மாற்றப்பட்ட 3 பெரிய விஷயங்கள்.. இதெல்லாம் ரொம்ப முக்கியம்!
சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து விதிகள் மற்றும் செயல்பாடுகளில் ஒரே நாளில் 3 முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
விதி மீறல்: டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
முக்கியமாக சென்னையில் அதிகம் இப்படி நடக்கிறது. அதோடு சிலர் சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களை கண்காணிக்க, அவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய வழிமுறை ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.
மாற்றம் 1: நேற்று அமைச்சர் உதயநிதி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய சாலையில் ஏற்படும் பள்ளங்களை பொது மக்களின் துணையோடு கண்டறிந்து, குறித்த காலத்தில் செப்பனிடும் திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட இணையத்தின் அடிப்படையிலான "நம்ம சாலை" என்ற புதிய மென்பொருள் மற்றும் கைபேசி செயலியை தொடங்கி வைத்தார்.
இச்செயலியின் மூலம், நெடுஞ்சாலைத்துறையினால் பராமரிக்கப்படும் சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் கைபேசி செயலி வாயிலாக, புவி குறியீட்டுடன் கூடிய புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் அச்சாலைக்குரிய பொறியாளருக்கு செயலி வாயிலாக தெரிவிக்கப்பட்டு, குறித்த காலக்கெடுவுக்குள் பள்ளங்களை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன் பிறகு, சரி செய்யப்பட்ட விவரம், சாலையின் புகைப்படங்களுடன், "நம்ம சாலை" செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு, புகார் அளிக்கும் பொதுமக்களின் அலைபேசிக்கு அனுப்பப்படும். அதன்படி சாலையில் ஏற்படும் பள்ளங்கள் உடனுக்குடன் சீர் செய்யப்படுவது மட்டுமல்லாமல், தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படும்.
மாற்றம் 2: இந்த நிலையில்தான் வாகனங்களில் பல வண்ண விளக்குகள் பொறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல வண்ண ஒளி விளக்குகள் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கவனத்தை சிதறடிப்பதால் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்புகளை வருகிற 4 ஆம் தேதி முதல் நிர்ணயித்த போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மாற்றம் 3: அதன்படி இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்!
இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து விதிகள்; இந்த நிலையில்தான் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய பல்லாயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பல்வேறு விதிகளான வேகமாக ஓட்டுவது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுவது, டிராபிக் லைட்டுகளை பின்பற்றாமல் இருப்பது, கோடுகளை மதிக்காமல் நிற்பது, ரேஷ் டிரைவிங் செய்வது போன்ற காரணங்கள் காரணமாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி சென்னையில் விதிகளை மீறிய 12600 பேரின் லைசன்ஸ் முடக்கப்பட்டு உள்ளது. இதில் 50 சதவிகிதம் பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உளது என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications