நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 ராட்சச திட்டங்கள்.. இது நடந்தால்.. சென்னையின் எதிர்காலமே மாறும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையின் போக்குவரத்து முறையை மாற்ற போகும் வகையில் 3 முக்கியமான திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் சென்னையின் எதிர்காலத்தையே அடியோடு மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் 3 முக்கியமான சாலை திட்டங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை ஜிஎஸ்டி சாலை பலாம், சென்னை அண்ணா சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் மற்றும் மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலை ஆகியவை தீவிரமாக அமைக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இந்த சாலை திட்டங்கள் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

automobile chennai

திட்டம் 1 - மதுரவாயல் பாலம்

எதிர்பார்த்ததை விட வேகமாக துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு உயர்நிலை சாலைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த ரூட்டில் பல இடங்களில் புதிய பில்லர்கள் முழுமையாக நிறுவப்பட்டு உள்ளன. இன்னொரு பக்கம் இந்த திட்டத்திற்காக கூவத்தில் தற்போது தூண்கள் கட்டப்பட்டு வருகின்றன.

துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு பாலத்தின் பணிகளுக்கு இந்திய ராணுவத்திடம் உள்ள 490 மீட்டர் நிலத்தை பெறுவதில் உள்ள தாமதத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான இறுதிக்கட்டத்தில் பணிகள் நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வும் செய்யப்பட்டு உள்ளது. மதுரவாயல் - துறைமுகம் இடையே பாலம் அமைக்கும் திட்டம் பல காலமாக ஜெயலலிதா
ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம். மதுரவாயல் வழியாக சென்னை உள்ளே நுழையும் பலர் பாதி கட்டப்பட்டு நிற்கும் பாலங்களை பார்த்து இருப்பார்கள். வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்டும் இடங்களாக காட்சி அளிக்கும்.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இந்த திட்டத்தை நிறுத்தினார். கூவத்தின் மீது பாலம் கட்டுவது சுற்றுசூழலை பாதிக்கும் என்று கூறி திட்டத்திற்கு. முட்டுக்கட்டை போட்டார். தமிழ்நாட்டில் அப்போது அரசியல் ரீதியாக கடுமையாக ஈகோ மோதல் நிலவி வந்தது. முக்கியமாக புதிய சட்டசபை கூட மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதனால் இந்த திட்டமும் கைவிடப்பட்டது , கட்டப்பட்ட பாலங்கள் அப்படியே நின்றன. அந்த திட்டம் அதன்பின் மேம்படுத்தப்படாமலே இருந்தது. 2011ல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் 2022 வரை தொடங்கப்படாமல் இருந்தது. 11 வருடமாக திட்டம் முடங்கி கிடந்தது. இங்கு வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சென்னைக்கே அலங்கோலத்தை கொடுக்கும் விதமாக மாறியது.

இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் நடந்து வருகிறது.

மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தற்போது தீவிர வேகத்தில் பணிகள் நடக்கின்றன. முதல்முனையாக மதுரவாயல் சாலையில் பேரிகேட் போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் பின் அந்த பில்லர்கள் இடிக்கப்படும். இப்போது கூவம் நதியில் பில்லர்கள் கட்டப்படும் நிலையில்.. கூவத்தில் ஆங்காங்கே மணல், மண் கொட்டப்பட்டு உள்ளது.

இதனால் கூவம் நதி ஆங்காங்கே தடுக்கப்பட்டு குறுகி போய் உள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. சாட்டிலைட் புகைப்படங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதால் கூவம் நதிக்கு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னொரு பக்கம் இதற்காக தற்போது கூவத்தில் குழிகள் தோண்டி தூண்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. 14 ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த திட்டத்தில் உச்சபட்ச வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றது. இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து பணிகள் தொடங்கி உள்ளன.

இந்த பாலம் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த 20.6 கிலோ மீட்டர் தூர பாலத்தில் மொத்தம் 7 என்ட்ரி இருக்கும். அதாவது வேறு வேறு சாலைகளில் இருந்து பாலத்திற்குள் 7 இடங்களில் இணைய முடியும். முக்கிய இடங்களில் மட்டும் இந்த 7 இணைப்புகள் வைக்கப்படும். அதேபோல் பாலத்தில் இருந்து வெளியேற 6 இடங்களில் எக்சிட் வைக்கப்படும். அதாவது இரட்டை அடுக்கு பாலம் உள்ள பாதையில் பாலத்தில் இருந்து வெளியேற 6 எக்சிட் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 20.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதில் கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் இடையே உள்ள தூரம் மட்டும் இரட்டை அடுக்கு பாலமாக அமைக்கப்படும்.இரட்டை அடுக்கு பாலம் என்றால், வடபழனியில் கீழே பாலம் மேலே மெட்ரோ பாலம் உள்ளதே.

அதேபோல்தான். ஆனால் இதில் இரண்டு மேம்பாலங்களும் வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்படும். சர்வதேச நாடுகள் பலவற்றில் இது போன்ற பாலங்கள் உள்ளன. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இது போன்ற இரட்டை பாலங்கள் பயன்படுத்தப்படும். ஒரு பாலம் நேப்பியர் டூ கோயம்பேடு செல்லவும் , இன்னொரு பாலம் கோயம்பேடு டூ நேப்பியர் செல்லவும் ஒன் வே போல பயன்படுத்தப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

திட்டம் 2- திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TNSHA) ரூ. 2,100 கோடி மதிப்பீட்டில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை 14.2 கி.மீ. நீளத்திற்கு நான்கு வழி மேம்பாலம் அமைக்க உள்ளது. இது மாநில அரசு மேற்கொள்ளும் மிக நீளமான உயர்மட்ட சாலைத் திட்டமாகும். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற காரணங்களால் திட்டத்தின் இறுதிச் செலவு மாறக்கூடும்.

சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் மற்றும் பிற சுற்றுலா, புனித யாத்திரை தலங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு இந்தத் திட்டம் போக்குவரத்து நெரிசலில் இருந்து விரைவில் நிவாரணம் அளிக்கும். TNSHA நேற்று இந்த திட்டத்திற்கான சர்வதேச டெண்டர்களை வெளியிட்டது.

இந்த உயர்மட்டச் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், திட்டத்திற்காக ECR சாலை 30 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தப்படுகிறது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், LB சாலை சந்திப்பு மற்றும் நீலாங்கரை போன்ற முக்கிய இடங்களில் துணை பாதைகள் அமைக்கப்படும்.

திட்டம் நிறைவடைந்ததும், தற்போதைய 60 நிமிட பயண நேரம் 15-20 நிமிடங்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டைடல் பார்க் முதல் உத்தண்டி வரை, நடுவரிசையில் தூண்கள் அமைத்து இந்த மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இந்தச் சாலை 16 முதல் 20 மீட்டர் அகலத்துடன் நடைபாதைகளையும் கொண்டிருக்கும்.

இந்த மேம்பாலத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும். வங்கிக் கடன்கள் மூலம் தனியார் பங்களிப்புடன் இந்தச் சாலை கட்டப்படும். இது கிழக்கு கடற்கரை சாலையில் நெரிசலைக் குறைப்பதுடன், அடையாறில் இருந்து கேளம்பாக்கம், திருப்போரூர், மாம்பாக்கம் போன்ற ஓஎம்ஆர் பகுதிகளுக்கும் மாற்றுப் பாதையாக அமையும்.

நீலாங்கரை, கொட்டிவாக்கம், வெட்டுவாங்கேணி, இஞ்சம்பாக்கம், அக்கரை, பனையூர் உள்ளிட்ட 13 முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எல்.பி. சாலை சந்திப்பு, திருவான்மியூர் ஆர்.டி.ஓ, நீலாங்கரை, இஞ்சம்பாக்கம், அக்கரை ஆகிய இடங்களில் இந்த மேம்பாலத்தில் வெளியேறும் வழிகள் அமைக்கப்படும்.


திட்டம் 3 - அண்ணா சாலையில் உயர்மட்டச் சாலை

சென்னை, தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை உயர்மட்டச் சாலைத் திட்டம், தமிழ்நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த மேம்பால கட்டுமானமாக உருவெடுத்துள்ளது. இதன் பணிகள் தற்போது 50% முடிந்துள்ளன. அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் இந்த உயர்மட்ட சாலை, சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ஒரு முக்கிய திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது. கீழே மெட்ரோ சுரங்கம் உள்ள நிலையில், அதற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். பொறியியல் அதிசயம் என்று சொல்லும் விதமாக, மெட்ரோ சுரங்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த சாலை அமைக்கப்படவுள்ளது.

இன்ஜினியரிங் அதிசயம் என்று அழைக்கப்படும் வகையில், பரபரப்பான அண்ணா சாலையில் 3.2 கி.மீ., நான்கு வழி உயர்மட்ட சாலைப் பணிகள் முடிந்தவுடன், தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே பயணிகள் 10 நிமிடங்களுக்குள் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பாலங்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்த சாலை ஒரு நீளமான பாலமாக அமைக்கப்பட உள்ளது.

சென்னையில் அண்ணா சாலையில் உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்பார்க்கப்பட்டதை விட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இங்கு அமைக்கப்படும் தூண்கள் கான்கிரீட் இல்லாமல் இரும்பு தூண்களாக இருப்பதால், தூண்கள் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளன.

இதனால், வரும் நாட்களில் பணிகள் விரைவாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+