சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வேயை.. அண்ணாந்து பார்க்க போறீங்க.. 5 இடங்களில் நடக்க போகும் மாற்றம்
சென்னை: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH 48) பாதசாரிகள் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு ஐந்து "அதிக விபத்து ஏற்படும் பகுதிகளில்" புதிய மேம்பாலங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திட்டமிட்டுள்ளது. சேவை சாலைக்கும் முக்கிய சாலைக்கும் இடையேயுள்ள தடுப்புகளில் சிறிய இடைவெளிகள் வழியாக பாதசாரிகள் சாலையைக் கடப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
இருபுறமும் குடியிருப்புகளும் வணிக வளாகங்களும் அதிகரித்ததால் இந்த மேம்பாலங்களின் தேவை அதிகரித்துள்ளது என NHAI அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் பெருகியதால் இந்தச் சாலையைக் கடக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை
புதிய மேம்பாலம் பாதசாரிகளுக்கு, குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு, பரபரப்பான நேரங்களில் சாலையைக் கடக்க பெரும் உதவியாக இருக்கும்," என்று உள்ளூர் குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். பொய்கை, வாசூர், மேல்மனாவூர், வல்லலார் நகர், ரங்கபுரம் ஆகிய ஐந்து இடங்கள் அதிக விபத்து ஏற்படும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பொய்கையில் அரசு கால்நடை மருத்துவமனையும், அரசு தொழிற்பயிற்சி நிலையமும் உள்ளன. மேல்மனாவூரில் மாவட்டத்திலேயே பெரிய இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது.
வாசூரில் புதிதாகத் திறக்கப்பட்ட முருகன் கோயில் பக்தர்களை ஈர்க்கிறது. ரங்கபுரமும், மாநகராட்சி வரம்புக்குட்பட்ட வல்லலார் நகரும் அதிக மக்கள் நடமாட்டத்தைக் கொண்டுள்ளன என வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
திட்டத்தின்படி, புதிய மேம்பாலத்தில் சேவைச் சாலையின் இருபுறமும் சுமார் 20 படிக்கட்டுகள் இடம்பெறும். ஒரு மேம்பாலத்தின் சராசரி கட்டுமானச் செலவு ₹1.8 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் மீது நிழற்கூரைகள், விளக்குகள் மற்றும் CCTV கேமராக்கள் பொருத்தப்படும். கீழே விழாமல் தடுக்க மேம்பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்வுதளங்களும், முதியவர்கள் மற்றும் பெண்களுக்காக மின்தூக்கிகளும் அமைக்கப்படும். இந்த மேம்பாலங்களுக்கான பணிகள் அடுத்த சில மாதங்களில் தொடங்கும்.
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே - மேம்பாலங்களுக்கான பணிகள்
தற்போது, பாதசாரிகள் சேவைச் சாலைக்கும் முக்கிய சாலைக்கும் இடையேயுள்ள இரும்புத் தடுப்புகளில் உள்ள சிறிய இடைவெளிகளைப் பயன்படுத்தி சாலையைக் கடக்கின்றனர். இவற்றுள் பெரும்பாலான இடைவெளிகள் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் அமைந்துள்ளன. புதிய மேம்பாலங்கள் தற்போதைய போக்குவரத்து ஓட்டத்தைப் பாதிக்காமல், பாதசாரிகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க வழிவகுக்கும் என NHAI அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விதிமுறைகளின்படி, நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 1.5 கிலோமீட்டருக்கும் ஒரு வாகனச் சுரங்கப்பாதையோ அல்லது மேம்பாலமோ அமைக்கப்பட வேண்டும்.
இது பாதுகாப்பான போக்குவரத்துக்கு உதவும். மேலும், முக்கிய சந்திப்புகள் மற்றும் உணவகங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் இத்தகைய வசதிகள் அமைக்கப்படலாம். கிருஷ்ணகிரிக்கும் வாலாஜாபேட்டைக்கும் (ராணிப்பேட்டை மாவட்டம்) இடையிலான 148 கி.மீ தூரத்தில், வாலாஜாவிற்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையே 17 சுரங்கப்பாதைகள் உள்ளன.
டோல் கட்டணம் வசூல்
புதிதாக திறக்கப்பட்ட பெங்களூர்-சென்னை விரைவுச் சாலையின் கர்நாடகப் பகுதியில் 70 கி.மீ தூரத்திற்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பணியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தொடங்கி உள்ளது. இதன்மூலம், இந்த வழித்தடத்தில் தினமும் இலவசமாக பயணம் செய்த வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் திறக்கப்பட்ட இந்த விரைவுச் சாலை, கர்நாடகாவில் முதன்முறையாக அமைக்கப்பட்டது. ஹோஸ்கோட்டையிலிருந்து கோலார் தங்க வயல் (KGF) வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. NHAI இப்போது சுங்கக் கட்டணத்தை இறுதி செய்துள்ளது. கார் ஓட்டுநர்கள் ஒருமுறை பயணத்திற்கு ₹150 மற்றும் சென்று வர ₹225 செலுத்த வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications