சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வேயின்.. மிக முக்கியமான ஸ்ட்ரெட்ச்.. இந்த மாதமே திறக்கப்படும் சாலை
சென்னை: பெங்களூரையும் - பெங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ்வேயையும் இணைக்கும் மிக முக்கியமான ரிங் ரோடு சாலை இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. ஒருவகையில் பெங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ்வேயின் நீட்சியாக கருதப்படும் இந்த சாலைதான் பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளை பெங்களூர் சென்னை எக்ஸ்பிரஸ்வே உடன் இணைகிறது.
Satellite Town Ring Road (STRR) என்று அழைக்கப்படும் இந்த சாலை தமிழ்நாடு பார்டர் வரை அமைக்கப்பட உள்ளது. 288 கிமீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. மொத்த பெங்களூரையும் சுற்றும் அளவிற்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் பெங்களூரின் டிராபிக் குறையும். அதேபோல் பெங்களூர் தமிழ்நாடு இணைப்பு எளிதாகும்.

இதன் ஒரு பகுதி இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே பெங்களூர் -சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக பகுதி மக்களால் இது நீண்ட டிரைவ்களுக்கும் ஜாலி ரைடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இன்னும் முடிக்கப்படாத 260 கிமீ விரைவுச் சாலை ஆகஸ்ட் 2025 க்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
71 கிலோமீட்டர் நீளமுள்ள கர்நாடகப் பகுதி திறந்திருப்பதால், விரைவுச் சாலையைச் சுற்றி வசிக்கும் உள்ளூர் மக்களும், சாலை முடியும் வரை நீண்ட தூரம் சென்று திரும்பி வந்தவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர்.
ஹோஸ்கோட் அருகே ஜின்னகெரா கிராஸில் உள்ள ஒரு கோயில் காரணமாக இங்கே பணிகள் தாமதமாக நடந்தது. கோவில் இடமாற்றம் செய்யப்பட்டு, 400 மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி தற்போது முடிவடைந்தது. இதையடுத்து சாலை மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. சில சிறிய பணிகளைத் தவிர மற்ற பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது .
விரைவுச்சாலையில் மாலூர், பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களாவில் வெளியேறும் கிளை சாலைகள் உள்ளன. முழு நீளமும் இன்னும் முடிவடையாததால், டோல் சார்பாக எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. இந்த விரைவுச் சாலையை இப்போது உள்ளூர்வாசிகள் மற்றும் நீண்ட தூரம் செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த விரைவுச்சாலையானது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது மற்றும் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இப்போது 6 மணி நேரத்திற்கும் மேலாக உள்ள பயண நேரத்தை மூன்று மணி நேரத்திற்குள் குறைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நான்கு வழிச்சாலையின் கட்டுமானம் கர்நாடகாவில் மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
தொகுப்பு 1: ஹோஸ்கோட் மற்றும் மாலூருக்கு இடையே, 27.1 கி.மீ.
தொகுப்பு 2: மாலூர் மற்றும் பங்கார்பேட்டை இடையே 27.1 கி.மீ
தொகுப்பு 3: பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களா இடையே 17.5 கி.மீ
சாலை: பெங்களூர் சென்னை விரைவுச்சாலையில் அவசரத்திற்கு யூ டர்ன் எடுக்கும் வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவசர கால தேவைகள், போக்குவரத்து மாற்றங்களை சமாளிப்பதற்காக யூ டர்ன் எடுக்கும் வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சாலையில் கார்களுக்கு 100 கிலோ மீட்டர் வேகமும், பேருந்துகளுக்கு 120 கிலோ மீட்டர் வேகமும் லிமிட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை NH-7 என்று அழைக்கப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications