ஆத்தூர் கோவிலில் விஜய் பக்கத்தில் அம்மன் வேடத்தில் திரிஷா.. பேனர் பார்த்து ரசிகர்கள் கேள்வி இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய்யும், நடிகை திரிஷாவும் இணைந்து நடித்த படங்கள் பற்றி பேசுவது ரசிகர்களுக்கு புதிதல்ல. ஆனால் கடந்த சில மாதங்களாக இருவரையும் இணைத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகளும், விவாதங்களும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் வைக்கப்பட்ட ஒரு பேனர் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவில் திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட அந்த பேனரில் தமிழகம் முதல்வர் விஜய்யின் மிகப்பெரிய புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். அதற்கு கீழே நடிகை திரிஷா அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற போட்டோவையும் வைத்திருக்கிறார்கள். இந்த பேனரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகின்றனர். இந்த பேனரை பார்த்ததும் அதை ஆதரிப்பதை விட எதிர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

Vijay Trisha Attur Salem Mariamman Temple

பேனரில் திரிஷா விஜய்

பலர் ஒரு கோவில் திருவிழாவில் நடிகையின் போட்டோவை அம்மன் வேடத்தில் வைத்து பேனர் அடிக்க வேண்டிய அவசியம் என்ன? கடவுள் திருவிழாவிற்கு சினிமா பிரபலங்களுக்கும் சம்பந்தமே இல்லாத விஷயத்தை ஏன் இப்படி செய்கிறார்கள்? என்று கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே விஜய், திரிஷா பற்றி பரவி வரும் வதந்திகளை சுட்டிக்காட்டி பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஏற்கனவே பல விஷயங்கள் சோசியல் மீடியாவில் கதை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் இப்படி இருக்கும்போது இதுபோன்ற பேனர்கள் வைத்து தேவையில்லாத விவாதங்களுக்கு வழி வகுக்கிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் நொந்து கொள்கிறார்கள்.

ஆத்தூர் கோவில் திருவிழா

திருவிழாவிற்கு விஜய்யின் ரசிகர்கள் அவர் படத்தை வைத்தால் பரவாயில்லை. அதில் திரிஷாவின் படத்தை எதற்காக அம்மன் வேடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்? இது ரசிகர்களை தூண்டுவதற்காக செய்த வேலை போல தெரிகிறது? என்றும் சிலர் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே தமிழகத்தில் போது இடங்களில் கட்டுப்பாடு இன்றி பேனர்கள் வைப்பது தொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. பேனர் விழுந்து சில உயிரிழப்புகள் நடந்ததால் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைப்பது தொடர்பாக நீதிமன்றங்களும் அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள் வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில், சட்டம் இருக்கும்போது இதுபோன்ற பேனர்கள் எப்படி வைக்கப்படுகின்றன? கோவில் திருவிழா என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அச்சிடிட்டு வைக்கலாமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

Vijay Trisha Attur Salem Mariamman Temple

ரசிகர்கள் கேள்வி

தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சியில் திரிஷாவிடம் ரசிகர் ஒருவர் "விஜய் சாரை கெட்டதாக சொல்லுங்கள்" என்று சொல்ல, அதை கண்டுகொள்ளாத மாதிரி திரிஷா ரியாட் செய்திருந்த வீடியோ ட்ரெண்ட் ஆனது. அதேபோல் சமூக வலைத்தளங்களில் இருவரையும் இணைத்து பல்வேறு பதிவுகள் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விஜய்யின் பிறந்தநாளுக்கு கூட திரிஷா எந்த போஸ்ட்டும் போட்டு விடக்கூடாது என்று பலரும் வேண்டுகோள் வைத்து வந்தனர். ஆனால் திரிஷா விஜயின் பிறந்தநாள் முடிந்து அடுத்த நாளே 5 கேக் முன்பு விஜய் அமர்ந்திருப்பது போலவும், தான் அவரை ரசிப்பது போலவும் ஒரு போட்டோவை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து சொல்லி இருந்தார்.

விஜய் பற்றி ஆஸ்திரேலியாவில் ரசிகர் சொன்ன வார்த்தை.. டக்குனு திரிஷா செய்த செயல்.. இலங்கை தமிழ் பற்றி பெருமிதம்
விஜயின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் திரிஷா விதவிதமாக போஸ்ட் போட்டு வருவார். அந்த வரிசையில் இந்த முறை போட்ட போஸ்ட்டும் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்பு இப்போ கோவில் பேனரில் கூட விஜய் திரிஷா பற்றி பேச வைத்து விட்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+