Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. இனி சின்னதாக விதி மீறினாலும் ஏஐ கேமரா படம் பிடிக்கும்.. செக் வைத்த அரசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா முழுக்க கட்டப்படும் தேசிய எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் ஏஐ கேமரா பொருத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக பெங்களூர் - மைசூரு சாலையிலும், சென்னை - பெங்களூர் சாலையிலும் பணிகள் முடிந்த பின் ஏஐ கேமரா பொருத்தப்பட உள்ளது.

தேசிய எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் செய்யப்படும் முறைகேடுகளை, போக்குவரத்து மீறல்களை தடுக்க ஏஐ கேமரா பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஏஐ கேமரா தானாக போக்குவரத்து மீறல்களை கண்டுபிடிக்கும். சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, ஹெல்மெட் போடாமல் செல்வது, வேகமாக செல்வது போன்றவற்றை இந்த ஏஐ கேமரா தானாக படம் பிடிக்கும்.

 AI camera to come in the expressways of the India: No more rule break to happen

இந்த ஏஐ கேமரா நாடு முழுக்க எக்ஸ்பிரஸ் வே சாலைகளில் வைக்கப்படும். இதில் விதி மீறல்களை படம் பிடித்த பின் அந்த வாகனம் பதிவு செய்யப்பட்டு உள்ள ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணிற்கு போன் மூலம் அபராதம் அனுப்பப்படும். அதை ஆன்லைன் மூலமோ அல்லது நேரிலோ அபராதமாக கட்டலாம்.

விரைவுச் சாலை கட்டுமானம்: விரைவு சாலைகள் இந்தியாவின் மிக உயர்ந்த சாலைகள் ஆகும். ஜூலை 2023 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 5,173 கிமீ (3,214 மைல்) அதிவேக நெடுஞ்சாலைகள் அதாவது எக்ஸ்பிரஸ் வே உள்ளன. இவை பெரும்பாலும் 6, வழி அல்லது 8 வழி சாலைகள் ஆகும்.

இங்கே அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் கூட செல்ல முடியும். கட்டுமானத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலை இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலையாக இருக்கும். இது 2026 இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே இந்தியாவில் 2002 இல் தொடங்கப்பட்ட முதல் 6-வழி செயல்பாட்டு விரைவுச்சாலை ஆகும். தற்போது, ​​இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ்வே, மும்பை-நாக்பூர் எக்ஸ்பிரஸ்வே (கட்டம்-II) 600 கிமீ (370 மைல்), 2022 இல் திறக்கப்பட்டது மற்றும் (கட்டம்-II) மே 2023 இல் திறக்கப்பட்டது. மற்றும் 2021 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட 14 பாதைகள் கொண்ட டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி - தஸ்னா (யுபி எல்லை) பிரிவில் அகலமான விரைவுச்சாலையாக உள்ளது.

எக்ஸ்பிரஸ்வேக்கள்: ஜூலை 2023 நிலவரப்படி, 5,173 கிமீ (3,214.4 மைல்) நீளம் கொண்ட 48 எக்ஸ்பிரஸ்வேக்கள் இந்தியாவில் செயல்படுகின்றன, மேலும் 8,772 கிமீ கட்டுமானத்தில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் சுமார் 1,021 கிமீ அதிவேக நெடுஞ்சாலைகள் மட்டுமே இருந்தன.


உத்தரப்பிரதேசம் 1,396 கிமீ (867 மைல்) 8 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
மகாராஷ்டிரா 793.4 கிமீ (493.0 மைல்) 6 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
ராஜஸ்தான் 757 கிமீ (470 மைல்) 3 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
ஹரியானா 609 கிமீ (378 மைல்) 7 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
மத்தியப் பிரதேசம் 244 கிமீ (152 மைல்) எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
சத்தீஸ்கர் 191 கிமீ (119 மைல்) 2 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.
கர்நாடகா 171 கிமீ (106 மைல்) 5 எக்ஸ்பிரஸ் வே சாலைகள் உள்ளன.

வடஇந்தியா: தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன. வடஇந்தியாவில் இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் தமிழ்நாட்டில் கட்டப்படவில்லை.

தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

திறக்கப்படும் சாலைகள்: துவாரகா விரைவுச் சாலையின் 18.7 கிமீ பகுதி இன்னும் இரண்டு வாரங்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ்வேயின் குர்கான் பகுதி முதல் கட்டமாக திறக்கப்பட உள்ளது. எட்டு வழிகள் கொண்ட விரைவு சாலையானது , புதிய செக்டார் பகுதியில் இருந்து NH-8 சாலையை இணைக்கும் வகையிலும், குர்கான் நகரின் பிற பகுதிகளுக்கு பயணத்தை எளிதாக்கும் வகையிலும் திறக்கப்பட உள்ளது.

டெல்லியில் மீதமுள்ள 10 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ்வே முடிக்க இன்னும் ஐந்து முதல் ஆறு மாதங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது 1 மணி நேரமாக உள்ள 18.7 கிமீ தூரம் இந்த சாலை திறக்கப்பட்ட பின் 20 - 25 நிமிடம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எட்டு வழிகள் கொண்ட விரைவு சாலையாக இது கட்டப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+