போச்சு.. பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் வே திறந்து கொஞ்ச நாளிலேயே.. நடந்த சம்பவம்.. போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ்வேயின் ஒரு பகுதி திறக்கப்பட்ட சில நாட்களிலேயே விதிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய சவால் ஏற்பட்டு உள்ளது.

பெங்களூர் -சென்னை எக்ஸ்பிரஸ் விரைவுச் சாலையின் கர்நாடகப் பகுதி முழுமையடைந்து போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடக பகுதி மக்களால் இது நீண்ட டிரைவ்களுக்கும் ஜாலி ரைடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இன்னும் முடிக்கப்படாத 260 கிமீ விரைவுச் சாலை ஆகஸ்ட் 2025 க்குள் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

automobile chennai bangalore

71 கிலோமீட்டர் நீளமுள்ள கர்நாடகப் பகுதி திறந்திருப்பதால், விரைவுச் சாலையைச் சுற்றி வசிக்கும் உள்ளூர் மக்களும், சாலை முடியும் வரை நீண்ட தூரம் சென்று திரும்பி வந்தவர்களும் இதைப் பயன்படுத்துகின்றனர்.

பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ்வேயின் ஒரு பகுதி திறக்கப்பட்ட சில நாட்களிலேயே விதிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய சவால் ஏற்பட்டு உள்ளது. அதன்படி இந்த சாலை உள்ளே நுழைவதற்கே டோல் கேட் போடப்பட்டு உள்ளது.

அதாவது சாலையின் எந்த பகுதிக்கு உள்ளேயும் டோல் கேட் இல்லாமல் உள்ளே வெளியே செல்ல முடியாது. பாதி தூரம் சென்று அதன்பின் வெளியேறி அருகே உள்ள ஊர்களுக்கு செல்ல முடியாது. இந்த சாலையை பயன்படுத்த.. 1 கிமீ தூரம் செல்ல வேண்டும் என்றாலும் கூட டோல் கேட் வழியாகவே செல்ல வேண்டும்.

பெங்களூரு சென்னை விரைவுச் சாலையில் உள்ள அனைத்து வாயில்களிலும்.. அதாவது ஹோஸ்கோட், மாலூர், கேஜிஎஃப், பெத்தமங்களா ஆகிய நான்கு வழிகளிலும் டோல் கேட் கொண்டு வரப்பட்டு உள்ளது.

சாலை பின்னணி: ஹோஸ்கோட் அருகே ஜின்னகெரா கிராஸில் உள்ள ஒரு கோயில் காரணமாக இங்கே பணிகள் தாமதமாக நடந்தது. கோவில் இடமாற்றம் செய்யப்பட்டு, 400 மீட்டர் தூரம் சாலை அமைக்கும் பணி தற்போது முடிவடைந்தது. இதையடுத்து சாலை மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. சில சிறிய பணிகளைத் தவிர மற்ற பணிகள் எல்லாம்முடிந்துவிட்டது .

விரைவுச்சாலையில் மாலூர், பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களாவில் வெளியேறும் கிளை சாலைகள் உள்ளன. முழு நீளமும் இன்னும் முடிவடையாததால், டோல் சார்பாக எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. இந்த விரைவுச் சாலையை இப்போது உள்ளூர்வாசிகள் மற்றும் நீண்ட தூரம் செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த விரைவுச்சாலையானது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது மற்றும் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை இப்போது 6 மணி நேரத்திற்கும் மேலாக உள்ள பயண நேரத்தை மூன்று மணி நேரத்திற்குள் குறைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நான்கு வழிச்சாலையின் கட்டுமானம் கர்நாடகாவில் மூன்று தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.

தொகுப்பு 1: ஹோஸ்கோட் மற்றும் மாலூருக்கு இடையே, 27.1 கி.மீ.

தொகுப்பு 2: மாலூர் மற்றும் பங்கார்பேட்டை இடையே 27.1 கி.மீ

தொகுப்பு 3: பங்கார்பேட்டை மற்றும் பெத்தமங்களா இடையே 17.5 கி.மீ

சாலை: பெங்களூர் சென்னை விரைவுச்சாலையில் அவசரத்திற்கு யூ டர்ன் எடுக்கும் வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவசர கால தேவைகள், போக்குவரத்து மாற்றங்களை சமாளிப்பதற்காக யூ டர்ன் எடுக்கும் வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பொதுவாக எக்ஸ்பிரஸ் வே சாலைகளில்.. இப்படி யூ டர்ன் எடுக்கும் வசதிகள் இருக்காது. ஆனால் சென்னை பெங்களூர் சாலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலையில் மும்மொழி கொள்கை பின்பற்றப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+