அண்ணா நகரிலிருந்து தொடங்கிய விதி மாற்றம்! இனி வண்டிகளை எல்லா இடத்திலும் பார்க் பண்ணாதீங்க! புது ரூல்
சென்னை: சென்னை அண்ணா நகரில் வாகனங்களை பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் பல இடங்களில் படிப்படியாக இதன் மூலம் பார்க்கிங் விதிகள் மாற்றப்பட உள்ளன.
சென்னையில் வாகன பார்க்கிங் தொடர்பாக கொள்கைகளை வகுக்கும்படியும், எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப பார்க் செய்யும் முறையை தடுக்கவும் விதிகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் தமிழ்நாடு அரசு இது தொடர்பாக உறுதி அளித்துள்ளது.

சென்னையில் மக்கள் விதிமுறைகள் இல்லாமல் ஆங்கங்கே பார்க் செய்வதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இறுதிக் கொள்கை மூன்று மாதங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கிறார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் பேசுகையில், சாலைகளில் வாகனங்களை இடையூறாக நிறுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இறுதிக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து நிறுவனம் (சியுஎம்டிஏ) மோட்டார் வாகன பார்க்கிங் கொள்கை வரைவு கொண்டு வந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துகளைப் பெற்று மூன்று மாதங்களுக்குள் அது இறுதி செய்யப்படும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.
அண்ணா நகர்; இந்த நிலையில்தான் சென்னை அண்ணா நகரில் வாகனங்களை பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் பல இடங்களில் படிப்படையாக இதன் மூலம் பார்க்கிங் விதிகள் மாற்றப்பட உள்ளன.
அறிக்கை: மார்ச் 11, 2024 அன்று தலைமைச் செயலர் ஷிவ் தாஸ் மீனா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் CUMTA-வின் வரைவுக் கொள்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதில் சில பரிந்துரைகள் இணைக்கப்பட்டதாகவும் தலைமை நீதிபதி சஞ்சய் வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜே. சத்தியநாராயண பிரசாத் ஆகியோரின் முதல் டிவிஷன் பெஞ்ச் தெரிவிக்கப்பட்டது. இந்த வரைவு கொள்கை கொள்கையாக முழுமையாக 3 மாதங்களில் மாற்றப்பட உள்ளது.
இந்த வரைவுக் கொள்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல், வீடு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்களுக்கு அவர்களின் கருத்துக்களுக்காக அனுப்பப்பட்டது. அந்தத் துறைகளின் கருத்துகளைப் பெற்ற பிறகு, கொள்கை இறுதி செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம்,
வாகனங்களை எங்கே எல்லாம் பார்க் செய்யலாம்
எங்கே எல்லாம் பார்க் செய்ய கூடாது
தவறான இடங்களில் பாரக்ஸ் செய்தால் என்ன நடவடிக்கை, என்ன அபராதம்.
ஒரு இடத்தை பார்க்கிங் இடமாக மாற்ற எப்படி அனுமதி பெறுவது என்பது உள்ளிட்ட விதிகள் வகுக்கப்படும்.
லோக்சபா தேர்தல் : தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. இதனால் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், நடத்தை விதிகள் நீக்கப்பட்ட பின், வரைவு கொள்கை தொடர்பான அரசாணை வெளியிடப்படும்,. மூன்று மாதங்களுக்குள் இறுதிக் கொள்கை வெளியிடப்படும் என்று மாநில அரசு வழக்கறிஞர் ஏ.எட்வின் பிரபாகர் தெரிவித்தார்.
சமர்ப்பிப்புகளை பதிவு செய்த நீதிபதிகள், சாலைகளில் வாகனங்களை இடையூறாக நிறுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இறுதிக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். கொள்கையை இறுதி செய்வதில் நியாயமற்ற தாமதம் ஏற்பட்டால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வழக்கு பின்னணி: சென்னையில் நடைபாதையில் கூட மோட்டார் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து டி.ஸ்ரீ கிருஷ்ண பகவத் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) தொழில்நுட்ப டைவர் ஸ்ட்ரீட் பார்க்கிங் மேலாண்மை முறையை செயல்படுத்தியதாக முதலில் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பொது-தனியார் கூட்டு முயற்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்பின் தனியார் சேவை அமைப்புகள் வெளிப்படையான டெண்டர் செயல்முறையின் மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்கள்தான் பார்க்கிங்குகளை நிர்வகித்தனர். பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் பேருந்து அல்லாத வழித்தட சாலைகளில் நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களைக் இவர்கள்தான் கண்காணித்தனர்.
ஆனால் இதில் குறைபாடுகள் உள்ளன. இதனால் சென்னையில் வாகன பார்க்கிங் தொடர்பாக கொள்கைகளை வகுக்கும்படியும், எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப பார்க்கும் செய்யும் முறையை தடுக்கவும் விதிகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications