பாஸ்ட் டாக் முதல் லைசன்ஸ் வரை.. தமிழ்நாட்டின் 4 முக்கிய டிராபிக் ரூல்ஸ்.. தீவிரமாக சோதிக்கும் போலீஸ்
சென்னை: தமிழ்நாட்டில் வாகன போக்குவரத்து தொடர்பான 4 முக்கியமான விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. போக்குவரத்து போலீசார் இந்த 4 விதிகளை மிக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அந்த விதிமுறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
விதிமுறை 1: பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், வண்ண விளக்குகளை பொருத்தி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் வாகனங்களில் பல வண்ண விளக்குகள் பொருத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல வண்ண ஒளி விளக்குகள் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கவனத்தை சிதறடிப்பதால் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விதிமுறை 2: 2023 நவம்பருக்கு முன் வாங்கி இருந்தால்.. உங்கள் பிளேட்டில் standard font பயன்படுத்தி, முறையான இடைவெளி விட்டு நம்பர்களை வைக்க வேண்டும். எல்லா எண்கள், குறிகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஒரே அளவில் இருக்க வேண்டும். நம்பர்களில் டிசைன் இருக்க கூடாது.
நம்பர் பிளேட்டில் எந்த சிம்பலும், பெயர்களும் இருக்க கூடாது. வெள்ளை போர்டில் கருப்பு நிறத்தில் எண்கள் இருக்க வேண்டும். வாகனங்களில் நம்பர் பிளேட்கள் வைக்க சாதாரண ஸ்க்ரூ, போல்டுகளுக்கு பதிலாக ரிவெர்ட் பொருத்தப்படுவது கட்டாயம் ஆகிறது. இந்த பிளேட்களை நீக்க முடியாத அளவிற்கு ரிவெர்ட் பொருத்த வேண்டும். கடந்த நவம்பரிலேயே இந்த விதி வந்துவிட்டது. ஆனாலும் இப்போதுதான் இதை நாடு முழுக்க அமல்படுத்த தொடங்கி உள்ளனர். அதேபோல் உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) கொண்டு வருவதும் அவசியம் ஆகிறது.
விதிமுறை 3: 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைப்போம் என்று தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில், 8- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்? 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி.
12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும். கவனம் தேவை பெற்றோர்களே என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விதிமுறை 4: சுங்கவரி வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் விதிகளை அரசாங்கம் அவ்வப்போது மாற்றுகிறது. NPCI ஆகஸ்ட் மாதம் புதிய Fastag விதிகளை அமல்படுத்தியது. ஃபாஸ்டாக் பயனர்கள் இந்த புதிய விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.
இந்திய ரிசர்வ் வங்கி ஃபாஸ்டாக் மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை இ-மேண்டேட் கட்டமைப்பில் சேர்த்துள்ளது. அதாவது இ மேன்டேட் எனப்படும் கட்டமைப்பில் இணைத்து உள்ளது. இது கிரெடிட் கார்டு ஆட்டோபேமெண்ட் போல. அதாவது உங்கள் பாஸ்ட் டாக் கார்டில் பணம் தீர்ந்தவுடன்.. அது மினிமம் பேலன்சுக்கு கீழே வந்தவுடன்.. தானாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் இதில் சேர்க்கப்படும்.
அதாவது நெட்ப்ளிக்ஸ் போன்ற பக்கங்களில் எப்படி தானாக ரீ சார்ஜ் ஆகிறதோ அப்படி. இதற்கு நீங்கள் இ-மேண்டேட் அனுமதி மட்டும் கொடுக்க வேண்டும். அதை கொடுத்தால் போதும் இனி ஒவ்வொரு முறையும் உங்கள் Fastag யை ரீ சார்ஜ் செய்ய வேண்டாம். Fastagக்கிற்கு இ-மேண்டேட் தருவது தற்போது கட்டாயம் ஆகி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications