கவனம்! கார், பைக் லைசன்ஸ் வாங்க போறீங்களா? வந்தது புதிய சிக்கல்.. ரொம்ப சிக்கலா இருக்கே!
சென்னை: இனி லைசன்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கான எல்எல்ஆர் கட்டணம் செலுத்தும் வசதி நீண்ட நாட்களாக முடங்கிய நிலையிலேயே உள்ளது.
இந்தியாவில் அதிக வாகனங்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடுதான் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ள நிலையில் இரண்டாவதாக தமிழ்நாட்டில் அதிக அளவில் வாகனங்கள் உள்ளன. அரசு பேருந்துகளின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடுதான் முதலில் உள்ளது. தமிழர்கள் பொதுவாகவே வாகன பிரியர்கள்.

இதனால்தான் என்னவோ தமிழ்நாட்டில் புதிய வாகனங்களின் விற்பனைகள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படும் சென்னையிலும் அதிக அளவில் வாகன உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்களால் ஆர்டிஓ அலுவலகங்களிலும் கூட்டம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.
லைசன்ஸ் விதிமுறை: புதிய லைசன்ஸ் வாங்குவது, லைசன்ஸ் புதுப்பிப்பது, லைசன்சில் புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை செய்வது என்று பல காரணங்களுக்காக மக்கள் ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் மக்கள் இதில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அதோடு லாக்டவுன் சமயத்தில் பலர் புதிய லைசன்ஸ் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ஆன்லைன் சேவை: இந்த நிலையில்தான் இனி லைசன்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது அதன்படி ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே ஆன்லைன் மூலம் பணிகளை மேற்கொள்ள முடியும்.
இதை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறையில் அனைத்து ஊழியர்களும் கணினி பயன்படுத்தும் வகையில் கொடுத்தால் கணினிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு அரசு புதிய திட்டங்களை வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக 2,213 டீசல் பேருந்துகள், காற்று மாசைக் கட்டுப்படுத்த 500 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். ஜெர்மனி வங்கி நிதி உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் ஆர்டிஓ சைட்டில் எல்எல்ஆர் கட்டணம் செலுத்தும் வசதி நீண்ட நாட்களாக முடங்கிய நிலையிலேயே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எல்எல்ஆர் போட முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆதார் அத்தென்டிகேஷன் முடிந்தாலும் கூட பணம் செலுத்த முடியாத கடினமான சூழல் நிலவி வருகிறது.
ஆன்லைன் முறை: பழகுனர் உரிமம் (எல்எல்ஆர்), ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் (லைசென்ஸ்), ஓட்டுனர் உரிமத்தில் முகவரி மாற்றம் போன்ற அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். இதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும். அதேபோல் ஓட்டுனர் தேர்வு தளத்துடன் கூடிய சொந்த கட்டிடம் மதுரை மாவட்டம் (மதுரை தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு என்று தனியாக அமைக்கப்படும். இந்த கட்டிடம் ரூ.528 லட்சம் செலவில் கட்டப்படும். பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கும் வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்படும்.
திருவள்ளூர் போக்குவரத்து கழகத்தில் இயங்கி வரும் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு என்று சொந்த கட்டிடம் கட்டப்படும். மதுரையை போலவே கோவையிலும் இதற்காக தனி கட்டிடம் அமைக்கப்படும். கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ரூ.498 லட்சத்தில் கட்டப்பட்டு பல்வேறு சேவைகள் அங்கு வழங்கப்படும். எல்லா பணிகளும் இனி ஆன்லைனில் வழங்கப்படும்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications