கார், பைக்கை எல்லாம் சோதனை செய்ய போறாங்க.. நம்பர் பிளேட்டை உடனே மாற்றுங்க.. இல்லைன்னா ஃபைன்
பெங்களூர்: பெங்களூரில் HSRP நம்பர் பிளேட் எனப்படும் உயர்-பாதுகாப்பு பதிவுத் தகடுகளை (HSRP) நிறுவுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 15 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
HSRP இல்லாத வாகனங்களுக்கு 500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது, மாநிலத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான வாகனங்களில், 52 லட்சம் வாகனங்களில் மட்டுமே எச்.எஸ்.ஆர்.பி நம்பர் பிளேட்டை பயன்படுத்துவதாக கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது. முதல் முறை 500 ரூபாய் அபராதமும், மீண்டும் மீண்டும் செய்தால் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

HSRP பிளேட்டுகள் கட்டாயம்: இந்தியாவில், ஏப்ரல் 1, 2019க்கு முன் விற்கப்பட்ட வாகனங்களில் கட்டாயமாக உயர் பாதுகாப்புப் பதிவுத் தட்டு (HSRP) பிளேட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. எச்எஸ்ஆர்பி இல்லாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால், கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பதே தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க விதி. ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரையில் இதற்கு அபராதம் விதிக்கப்படும்.
HSRP நம்பர் பிளேட் என்பது எரிபொருள் வகையைக் குறிக்கும் வண்ண-குறியிடப்பட்ட லேபிகளுடன் உள்ளது. நம்பர் பிளேட்டுக்கு எளிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
இந்த நம்பர் பிளேட்டுகளில் 3டி ஹாலோகிராம், ரிப்ளக்டிவ் ஃபிலிம், ஹலோ கிராம்மில் எழுதப்பட்ட 'இந்தியா' என்ற பெயர் மற்றும் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட வரிசை எண் போன்ற சிறப்பு அம்சங்கள் இருக்கும்.
ஜூலை 2022 அன்று அல்லது அதற்குப் பிறகு விற்கப்படும் வாகனங்கள் இப்போது தானாக HSRP வகை எண் பிளேட்டுகளுடன் வருகின்றன. கர்நாடகா போன்ற பல மாநிலங்கள் இப்போது செப்.15, 2024 க்கு முன் பழைய வாகனங்களின் நம்பர் பிளேட்களை HSRP வகையில் மாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளன. வாகனத்தின் வகையைப் பொறுத்து 500 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
என்ன விதமான பிளேட்; எலக்ட்ரானிக் முறையில் பதிவு செய்யப்பட்டு உங்கள் காருடன் இணைக்கப்பட்ட அலுமினிய நம்பர் பிளேட்தான் உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டு (HSRP) என்று அழைக்கப்படுகிறது. நீல நிற ஹாலோகிராமில் குரோமியம் அடிப்படையிலான அசோக சக்ரா சின்னம் இதில் இருக்கும். HSRP தகடு 10 இலக்க PIN அல்லது நிரந்தர அடையாள எண் கொண்டு இருக்கும். இந்த எண் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கீழ்-இடது மூலையில் பொறிக்கப்பட்டுள்ளது. 20 மிமீ நீளம் மற்றும் 20 மிமீ அகலத்தில் இந்த பிளேட் இருக்கும்.
எப்படி விண்ணப்பம் செய்வது: உயர் பாதுகாப்பு எண் தகடு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டுக்கு விண்ணப்பிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது:
படி 1: https://bookmyhsrp.com/# ஐ பக்கத்திற்கு செல்லவும்..
படி 2: 'கலர் ஸ்டிக்கர் கொண்ட உயர் பாதுகாப்பு பதிவுத் தட்டு' என்பதைத் HSRPல் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: அடுத்து, என்ஜின் எண், சேஸ் எண், பதிவு எண், வாகனப் பதிவு நிலை மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிடவும்.
படி 4: 'இங்கே கிளிக் செய்யவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: அடுத்து, உங்களுக்கு அருகில் உள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்து, அப்பாயிண்ட்மெண்ட் ஸ்லாட்டை முன்பதிவு செய்யவும்.
படி 6: அடுத்த பக்கத்தில், கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
படி 7: சரிபார்ப்பிற்காக ரசீது நகல் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.
தற்போது, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், ஒரிசா, ஹிமாச்சலப் பிரதேசம், டெல்லி, டாமன் மற்றும் டையூ மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எச்எஸ்ஆர்பி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிற மாநிலங்களில் வசிக்கும் நபர்கள், அருகிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) சென்று HSRP க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்த நம்பர் பிளேட்டுகளை பெற வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) சென்று HSRP க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications