தமிழ்நாட்டிற்கு மட்டும் பாரபட்சம்.. மிக முக்கியமான 6 வழி சாலையை கைவிட்ட மத்திய அரசு? போச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி முக்கிய சாலை பகுதி ஒன்றின் விரிவாக்கம் மத்திய நெடுஞ்சாலை துறையால் கைவிடப்பட்டு உள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராணிப்பேட்டை - சென்னை சாலைக்கான டெண்டரை மத்திய அரசு கைவிட்டு உள்ளது. கடந்த 1.5 ஆண்டுகள் டெண்டர் விடும் பணியில் இருந்த பிறகு ராணிப்பேட்டையில் இருந்து 6 லேனிங் விரிவாக்க திட்டம் கைவிடப்பட்டு உள்ளது . தமிழ்நாடு - ஆந்திர பிரதேசம் இடையிலான இந்த முக்கிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள NH4 இன் டெண்டர் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Big Blow to Tamil Nadu The tender for 6 Laning of Ranipet project has been cancelled

மற்ற மாநிலங்களில் 6 வழி சாலை விரிவாக்கம் தீவிரமாக நடக்கும் நிலையில் தமிழ்நாட்டின் முக்கியமான திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. அதே சமயம் ஆந்திரா செல்லும் மக்களின் வசதிக்காக சென்னை - தடா சாலையின் அகலம் 6 வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு 4 வழி சாலைகள் வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. சென்னை-தடா தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி 95.75% முடிந்து, மீதமுள்ள சாலையின் 1.4 கிமீ நீளத்திற்கு ஒப்பந்ததாரர் சமீபத்தில் பணியைத் தொடங்கினார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (NHAI) கூற்றின்படி, ஒப்பந்ததாரர் இரண்டு இடங்களில் கட்டுமானத்தை இன்னும் முடிக்கவில்லை. இலகுரக வாகன அண்டர்பாஸ் (LVUP) மற்றும் ஒரு பாதசாரி சுரங்கப்பாதை ஆகியவற்றின் கட்டுமானம் மட்டும் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

இந்தக் கட்டமைப்புகளின் கட்டுமானச் செலவு ₹295.97 கோடியாகும், மேலும் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி ஜனவரி 2025-க்குள் இந்த பணிகள் முடிக்கப்பட வேண்டும். LVUP இல் இரண்டு பாதைகளும் முடிக்கப்பட வேண்டும் மற்றும் இரண்டு பக்கமும் வரும் வகையில் சாலையில் வசதிகள்இருக்க வேண்டும். வண்டிப்பாதையின் அகலத்திற்கு ஏற்றவாறு அகலப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாகவும், அந்த விலையில் கட்டுமானத்தை முடிக்க முடியவில்லை என்றும் ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். இதற்காக பண ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். NHAI பழைய தொகையை குறைத்த பிறகு கட்டணத்தில் உள்ள வித்தியாசத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை சாலைகள்: இது போக சென்னை உயர்த்தப்பட்ட பைபாஸ் சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பணிகள் தற்போது 70 சதவிகிதம் வரை நிறைவு பெற்றுள்ளது.

சென்னை உயர்த்தப்பட்ட பைபாஸ் சாலை மீண்டும் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 2024 இல் பணிகள் முடிக்கப்பட வேண்டும், அதை அடிப்படையாக வைத்து மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் NHAI இன் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதன் மூலம் இன்னும் சில மாதங்களில், பெருங்களத்தூரில் இருந்து புழல் வரை செல்லும் 32 கிமீ நீளமுள்ள சென்னை புறவழிச்சாலையை வாகன ஓட்டிகள் எளிதாக கடக்க முடியும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சார்பாக இங்கே உள்ள பிரதான சாலை மற்றும் சர்வீஸ் சாலை இரண்டு மீண்டும் அமைக்கப்பட உள்ளது.

பணிகள் முடிக்கப்பட வேண்டும்: மே 2024 இல் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும், அதன்படி மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் NHAI இன் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இப்பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு, வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. சாலையின் உயரத்தை அதிகரிக்காமல் இருக்க மேற்பரப்பை முதலில் நீக்கிவிட்டு, அதன்பின் நீக்கப்பட்ட சாலை மேல் புதிய சாலை போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைச் செய்தால், அகற்றப்பட்ட பொருட்களில் குறைந்தது 30% மீண்டும் பயன்படுத்தப்படும். இதற்காக மில்லிங் செய்யும் பணிகள் தற்போது நடக்கும் என்கிறார்கள்.

இந்த சாலைக்காக செலவிடப்படும் தொகையின் மொத்த மதிப்பு ₹100 கோடி மற்றும் மேற்பரப்பை புதுப்பித்தல் மட்டுமின்றி பல இடங்களில் பழுதடைந்துள்ள உலோக பீம் கிராஷ் தடுப்புகளை மாற்றுவது உள்ளிட்ட பிற பணிகள் செய்யப்பட உள்ளது சுமார் 90% பகுதி மழைநீர் வடிகால்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், 50% கட்டமைப்புகளுக்கு மட்டுமே நீர் வெளியேறும் குழாய்கள் உள்ளன, அவை இந்த முறை வழங்கப்படும். மீதமுள்ள பகுதிகளிலும் வடிகால் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

மின் விளக்கு: சமீபத்தில், 14.32 கோடி ரூபாய் மதிப்பில், ரோடு முழுவதும் மின்விளக்கு வசதி செய்யும் பணி நடந்தது. தலா 9 மீட்டர் உயரமுள்ள 347 மின் விளக்கு கம்பங்களும், தலா 10 மீட்டர் உயரமுள்ள 1,033 இரட்டைக் மின் விளக்கு கம்பங்களும், அதே உயரத்தில் 1,033 தனி மின் விளக்கு கம்பங்களும் பயன்படுத்தி மொத்தம் 2,133 LED விளக்குகள் நிறுவப்பட்டன.

ஈசிஆர்; ஈசிஆர் சாலையில் ஏற்கனவே பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.

மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+