ஃபாஸ்டேக் வச்சிருக்கீங்களா? அப்போ உடனே இதை செக் பண்ணுங்க.. இல்லனா உங்க கார் முடக்கப்படலாம்!
சென்னை: இப்போதெல்லாம் கார், ஜீப் வைத்திருக்கும் எல்லாரும் சுங்கச்சாவடிகளில் (Toll Gate) பணம் செலுத்துவதற்காக 'ஃபாஸ்டேக்' (FASTag) கார்டை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இந்த ஃபாஸ்டேக் சிஸ்டத்தில் இருக்கும் ஒரு பெரிய குளறுபடியால், மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவரது கார் நம்பரை பயன்படுத்தி வேறொரு நபர் புது ஃபாஸ்டேக் கார்டு வாங்கியதால், இவருடைய கார்டு திடீரென முடக்கப்பட்டிருக்கிறது.

டோல்கேட்டில் நடந்த பரபரப்பு
மும்பையைச் சேர்ந்த ருஷில் என்பவர், தனது காரில் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒரு டோல்கேட்டை தாண்டும்போது, அவருடைய ஃபாஸ்டேக் கார்டு வேலை செய்யவில்லை. அவருடைய கணக்கில் தேவையான அளவு பணம் இருந்தும், "பணம் செலுத்த முடியவில்லை" என்று காட்டியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே கஸ்டமர் கேர் (Customer Support) அதிகாரிகளை போனில் அழைத்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் சொன்ன விஷயம் ருஷிலை உரைய வைத்தது. யாரோ ஒரு லாரி அல்லது டிரான்ஸ்போர்ட் டிரைவர், ருஷிலின் கார் நம்பரை அப்படியே பயன்படுத்தி ஒரு புது ஃபாஸ்டேக் கார்டை வாங்கி ஆக்டிவேட் செய்துள்ளார். நம் நாட்டில் ஒரு கார் நம்பருக்கு ஒரு ஃபாஸ்டேக் தான் இருக்க வேண்டும் என்பதால், புது கார்டு வந்தவுடன், ருஷிலின் அசல் கார்டு தானாகவே முடங்கிப் போனது கஸ்டமர் கேர் மூலம் தெரியவந்தது.
இணையத்தில் எழும் கேள்விகள்
தனக்கு நடந்த இந்த அநியாயத்தை ருஷில் தனது 'X' (ட்விட்டர்) பக்கத்தில் ஆதாரத்துடன் பதிவிட்டார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி, பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. பொதுமக்களும் கார் வைத்திருப்பவர்களும் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்:
முறையான செக்கிங் இல்லையா?: ஏற்கனவே ஒரு கார் நம்பருக்கு ஃபாஸ்டேக் இருக்கும்போது, எந்த ஒரு பேப்பர் அல்லது ஆர்.சி புக்கை (RC Book) சரியாக செக் பண்ணாமல், வேறொருவருக்கு அதே நம்பரில் எப்படி புது ஃபாஸ்டேக் கொடுத்தார்கள்?
தவறான காரியங்களுக்கு பயன்படுத்தலாம்: இதேபோல் திருட்டுத்தனமாக அடுத்தவர் கார் நம்பரில் ஃபாஸ்டேக் வாங்கி, குற்றச் செயல்களுக்கோ அல்லது தவறான காரியங்களுக்கோ பயன்படுத்தினால் அதற்கு யார் பொறுப்பு?
மக்களுக்கு அலைக்கழிப்பு: எந்த தப்பும் செய்யாத அசல் கார் உரிமையாளர்கள், நெடுஞ்சாலையில் நடுவழியில் நின்று அபராதம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும்?
ஃபாஸ்டேக் என்பது கார் கண்ணாடியில் ஒட்டப்படும் ஒரு சிறிய ஸ்டிக்கர் ஆகும். டோல்கேட்டை தாண்டும்போது அங்குள்ள கேமரா இந்த ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து நம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும்.
சமீபகாலமாக, இப்படி அடுத்தவர் கார் நம்பரை தப்பாக பயன்படுத்துவது அதிகரித்ததால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 'ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்டேக்' என்ற கடுமையான விதியை கொண்டு வந்தது. புது கார்டு கொடுக்கும் முன் காரின் விவரங்களை சரியாக சரிபார்க்க வேண்டும் என்று வங்கிகளுக்கும் உத்தரவிட்டது. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும், இந்த மும்பை நபரின் விஷயத்தில் ஏமாற்று வேலை நடந்துள்ளது.
டிஜிட்டல் முறையில் நடக்கும் இதுபோன்ற குளறுபடிகளை தடுக்க, ஃபாஸ்டேக் வழங்கும் சிஸ்டத்தை இன்னும் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்றும், இது போன்ற புகார்களுக்கு உடனே தீர்வு காண தனி பிரிவு தொடங்க வேண்டும் என்றும் கார் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications