பெரிதும் எதிர்பார்க்கப்படும்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் வே! எப்போது திறக்கப்படும்? வந்த அறிவிப்பு
சென்னை: சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்பட உள்ள எக்ஸ்பிரஸ் வே சாலை அடுத்த வருட இறுதிக்குள் முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் வே கட்டுமானத்திற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விரைவு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படியே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 2 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
சென்னை பெங்களூர் விரைவுச்சாலை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த சாலையில் கீழ்கண்ட பல அதிரடி வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன. சாலையில் 90 சதவிகிதம் ஸ்பீட் பிரேக் கிடையாது. 10 சதவிகித இடங்களில் மெல்லிய பிளாஸ்டிக் ஸ்பீட் பிரேக் இருக்கும். இவை உயரம் குறைவாக இருக்கும். இதனால் பெரிய பாதிப்பு ஏற்படாது. அதே சமயம் வேகத்தை குறைக்க உதவும்.
சாலை விதிமீறல்களை, குற்றங்களை கண்காணிக்க கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன.ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் கண்காணிக்கும் கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளதால் நேரடியாக பைன் போட எளிமையாக இருக்கும்.
பைக் உள்ளிட்ட மெதுவான வாகனங்கள் செல்ல தனி பைபாஸ் இருக்கும். அதனால் இங்கே உள்ளூர் வாகனங்கள் செல்லாது. உள்ளூர் வாகனங்கள் கிராஸ் செய்ய கீழ்மட்ட பாலம் இருக்கும். அதனால் நடுவில் யாரும் வருவார்களோ என்ற அச்சம் இருக்காது.
டோல் கேட்டுகள் 15 வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லும் வகையில் விரிவாக கட்டப்பட உள்ளது. இந்த சாலையில் சுமார் 23 கிமீ தூரத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு செல்லும் அளவிற்கு நீண்ட உயர் மட்ட சாலை ஒன்று அமைக்கப்பட உள்ளது. சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எப்போது முடியும்: சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்பட உள்ள எக்ஸ்பிரஸ் வே சாலை அடுத்த வருட இறுதிக்குள் முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் வே கட்டுமானத்திற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 2024 அக்டோபர் மாதம் 9ம் தேதி இந்த சாலையின் கடைசி கட்டுமானம் முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே மாதம் இந்த சாலை தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்.
மேற்கண்ட பாலத்தின் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. அதோடு சென்னை பக்கம் இன்னும் சாலை பணிகள் பல இடங்களில் தொடங்கவே இல்லை. இன்னும் பல இடங்களில் 10 சதவிகிதம் மட்டுமே பணிகள் நடந்து உள்ளன. அப்படி இருக்கும் போது எப்படி இங்கே சாலை பணிகள் இந்த வருட இறுதிக்குள் முடியும். அதற்கு வாய்ப்பு இல்லவே இல்லையே என்கிறார்கள்.
-
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications