சென்னையில் சாலை ஓரம்.. கார், பைக் பார்க் செய்ய போறீங்களா? இனி ஃபைன் கட்டணும்.. புதிய விதி!
சென்னை: சென்னையில் சட்டவிரோத பார்க்கிங்கைக் கட்டுப்படுத்தவும், சாலைகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
25க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்மார்ட் பார்க்கிங் மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தவுள்ள மாநகராட்சி, அண்ணா நகர் மற்றும் தியாகராய நகரில் முதற்கட்டமாக இத்திட்டத்தை தொடங்குகிறது.

சென்னை பார்க்கிங்
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டப் பிரிவு (CUMTA) தகவல்படி, இந்த அமைப்பில் குறிப்பிட்ட பார்க்கிங் இடங்கள், டிஜிட்டல் கண்காணிப்பு, கட்டண முறை மற்றும் கடுமையான அமலாக்கம் ஆகியவை இடம்பெறும். பார்க்கிங் விதிகளை மீறினால் ₹500 அபராதம் விதிக்கப்படும்.
மேலும், வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கான கட்டணம் ₹800 வரையிலும், பறிமுதல் செய்யப்பட்டால் ஒரு நாளைக்கு ₹500 முதல் ₹1,000 வரையிலும் வசூலிக்கப்படும். இந்த நடவடிக்கை சென்னையின் சாலை நெரிசலைக் குறைத்து, பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அண்ணா நகரில் வாகன நிறுத்துமிடக் கட்டணத்தை பெருநகர சென்னை மாநகராட்சி உயர்த்தவுள்ளது. புதிய ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தின்கீழ், இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ₹5லிருந்து ₹15 ஆகவும், கார்களுக்கு ₹20லிருந்து ₹40 ஆகவும் கட்டணம் உயரும். காலக்கெடுவை மீறிய வாகனங்களுக்கு சக்கரத்தை லாக் செய்தல் , தினசரி பறிமுதல் கட்டணம், ஆறு மணி நேரத்திற்கு மேல் நிற்பவற்றை இழுத்துச் செல்லுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த சீர்திருத்தங்கள், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) 6 சதுர கி.மீ பரப்பளவிற்குத் தயாரித்த பகுதி அளவிலான பார்க்கிங் மேலாண்மை திட்டத்தின் ஓர் அங்கம். நியூ ஆவடி சாலை, ஈ.வி.ஆர். சாலை மற்றும் உள்வட்டச் சாலைகளால் சூழப்பட்ட பகுதி இதில் அடங்கும். இத்திட்டத்தை தனியார் ஒப்பந்ததாரர் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு 'உருவாக்கி-இயக்கி-மாற்று' (BOT) மாதிரியில் செயல்படுத்துவார். இதன் கீழ், 2,100 சமமான கார் நிறுத்துமிடங்கள் (ECS) CUMTA மென்பொருள் மூலம் டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கப்படும்.
அண்ணா நகர் பார்க்கிங்
காலக்கெடுவை மீறி 11 நிமிடங்கள் முதல் மூன்று மணி நேரம் வரை மிகையாக நிறுத்தினால், இருசக்கர வாகனங்களுக்கு ₹100, கார்களுக்கு ₹300 அபராதத்துடன் சக்கரம் பூட்டப்படும். மூன்று மணி நேரத்திற்கு மேலும் ஆறு மணி நேரம் வரையிலும் சக்கரம் பூட்டப்பட்டால், வழக்கமான நிறுத்துமிடக் கட்டணங்களுடன் கூடுதல் கட்டணம் சேர்க்கப்படும்.
ஆறு மணி நேரத்திற்கு மேல் நிறுத்தப்படும் வாகனங்களை இழுத்துச் செல்ல, இருசக்கர வாகனங்களுக்கு ₹225, கார்களுக்கு ₹450, வணிக வாகனங்களுக்கு ₹800 வரை கட்டணம் வசூலிக்கப்படும். வாகனப் பறிமுதல் கட்டணங்கள் வாகன வகையைப் பொறுத்து ஒரு நாளைக்கு ₹500 முதல் ₹1,000 வரை மாறுபடும். நிறுத்துவதற்கு அனுமதியற்ற இடங்களில் நிறுத்தினால் ₹500 அபராதம் விதிக்கப்படும்.
இந்த கடுமையான அபராதங்கள், அங்கீகரிக்கப்படாத நிறுத்தங்களைக் குறைத்து, போக்குவரத்து சீரடைய உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்டமாக, போக்குவரத்து மற்றும் பார்க்கிங் தேவை அதிகமாக உள்ள 26 கி.மீ தொலைவிலான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சாலைகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
ஆய்வுகளின்படி, அதிகபட்சமாக 11,500 இசிஎஸ்களுக்கும் மேலான தேவை இருந்தாலும், ஆரம்பத்தில் சுமார் 2,100 இசிஎஸ்கள் மட்டுமே நிர்வகிக்கப்படும். பன்மடங்கு தளங்கள் கொண்ட கட்டமைப்புகள் உட்பட கூடுதல் ஆஃப்-ஸ்ட்ரீட் பார்க்கிங் வசதிகள் அரசால் உருவாக்கப்பட்டு, ஒப்பந்ததாரரின் செயல்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.
கார் பார்க்கிங் கட்டணம்
இதுபோக சென்னையில் சாலை ஓரங்களில் பார்க் செய்யப்படும் வாகனங்களை கண்காணிக்க எக்ஸ் ஃபோர்ஸ் படைகளை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் தவறான நிர்வாகம் என்ற பல புகார்களுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி தற்போது தமிழ்நாடு முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் "எக்ஸ் போர்ஸ்" படையை களமிறக்கி உள்ளது.
சென்னையில் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட தெரு பார்க்கிங் வசதிகளை நிர்வகிக்கும் வகையில் முன்னாள் போலீஸ் அதிகாரிகளை களமிறக்கி உள்ளது. இப்போது பார்க்கிங்கின் நிர்வாகத்தை சிவில் அமைப்பே நேரடியாகக் கையாண்டு வருகிறது. இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 மற்றும் காருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இதில் பல முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுவதால் முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் படையை தமிழ்நாடு அரசு இங்கே களமிறக்கி உள்ளது. பார்க்கிங் மாற்றம்: சென்னையில் பல இடங்களில் சாலைகளில் வாகனங்களை பார்க்கும் செய்யும் வழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் எந்த இடத்தில் யார் பார்க் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளத. இந்த புதிய பிரச்னையை தீர்க்க புது பார்க்கிங் விதிமுறைகளை தமிழ்நாடு அரசு கொண்டு வர உள்ளது.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications