நடிகர் கரிகாலனை நினைவிருக்கா? திருநெல்வேலி மண்ணின் மைந்தன்.. இப்போதும் எப்படி இருக்கிறார் பாருங்க!
சென்னை: 90ஸ்களின் தமிழ் சினிமாவில் வில்லன் என்றாலே ரசிகர்களுக்கு சில முகங்கள் உடனே ஞாபகத்திற்கு வரும். அந்த பட்டியலில் நடிகர் கரிகாலனும் ஒருவர். பார்வையாலேயே மிரள வைப்பார். தன்னுடைய கண்களாலேயே கோபத்தை தத்ரூபமாக காட்டுவார். விஜயகாந்த் படங்களில் அதிகமாக இடம் பிடித்தவர். சமீப காலமாக திரைப்படங்களில் காணாமல் இருந்த நிலையில் இப்போது பிரபல youtube சேனலில் கொடுத்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பல வருடங்களுக்குப் பிறகு கரிகாலனை பார்த்த ரசிகர்கள் இவர்தான் சோலையம்மா வில்லனா? இப்போதும் அதே கம்பீரமாக இருக்கிறாரே? இவருக்கு மட்டும் வயசே ஆகலையா? நான் பிறக்கும்போதே வந்த படத்தில் பார்த்த நடிகர் இப்போதும் ஹீரோ மாதிரி இருக்கிறாரே? என்று பல ரசிகர்கள் கமெண்ட்களை கொட்டுகிறார்கள்.
யார் இந்த கரிகாலன்
நடிகர் கரிகாலனின் சொந்த பெயர் வல்லவன் சற்குணம். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கள்ளிக்குளம் கிராமம் தான் அவருடைய சொந்த ஊரு. அவருடைய பெற்றோர்கள் ஸ்கூல் டீச்சராக இருந்த நிலையில் அவருக்கு சின்ன வயதிலிருந்து சினிமா மீதுதான் ஆர்வம் இருந்ததாம்.
அதனால் பாலிடெக்னிக் படிப்பை முடித்த பிறகு சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்து நடிகராக வேண்டும் என்று பல முயற்சிகள் செய்திருக்கிறார். அந்த நேரத்தில் எல்லாம் நடிகர் வையாபுரியுடன் தான் அவரும் ஒரு ரூமில் தங்கி இருந்தாராம். சினிமா வாய்ப்பு எந்த பின்பலமும் இல்லாதவர்களுக்கு எளிமையாக கிடைத்துவிடாது அதேபோலத்தான் இவருக்கும் நடந்திருக்கிறது.

நடிகர் கரிகாலனின் ஆரம்ப காலம்
முதலில் நாடோடி தென்றல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவரும் ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆனால் பிறகு அந்த படத்தில் வேற நடிகரை நடிக்க வைத்து விட்டார்களாம். அதற்கு பிறகு கஸ்தூரிராஜா இயக்கிய சோலையம்மா படத்தில் ஒரு கொடூரமான வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த கேரக்டரில் பார்த்ததுமே இவரை அடிக்கணும்னு தோணும். அந்த அளவிற்கு ஒரு தனி அடையாளத்துடன் தன்னுடைய நடிப்பை காட்டி இருக்கிறார்.
விஜயகாந்த் கதையை முடிச்சது வைகோ தான்.. விஜயையும் முடிக்காமல் விடமாட்டார்.. ஆர்.பி உதயகுமார்
அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழில் ரமணா, நிலவே வா, தேவன், கருப்பு ரோஜா, தயா, அரவான் காவியத்தலைவன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதனால் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
தயாரிப்பாளர் அவதாரம்
பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பி காமராஜர் கனவு கூடம் என்று தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சமூகத்தில் நல்ல கருத்துக்களை சொல்லும் குடும்ப படங்கள் தயாரிக்க வேண்டும் என்று பேட்டிகளில் பேசியிருந்தார். ஒரு பேட்டியில் பேசும் போது கூட வருடத்திற்கு 10 நல்ல படங்கள் தயாரிக்க வேண்டும். குடும்ப உறவுகளின் முக்கியத்துவம், சமூக பொறுப்பு, கலாச்சாரத்தை மதிக்கும் கதைகள் வரவேண்டும். எல்லோரையும் மாற்ற முடியாவிட்டாலும் சிலரையாவது மாற்ற முடிந்தால் போதும் என்று கூறியிருந்தார்.

நடிகர் கரிகாலன் கம்பேக்
அதற்குப் பிறகு சில வருடங்களாக அவரை சினிமாவிலும் காணவில்லை, சோசியல் மீடியாவிலும் காணவில்லை? இந்த நிலையில் தான் சமீபத்தில் அவர் Behindwoods யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அதில் அவர் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்தபடியே பேட்டி கொடுத்து இருக்கிறார்.
விஜயகாந்த் தம்பி அனுப்பி வச்சிருக்காரு! பாவா லட்சுமணனுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் ராஜ் மோகன்
அவரை பார்த்ததும் 90ஸ் வில்லனின் கம்பீரம் கொஞ்சம் கூட குறையவே இல்லையே என்று பிரமிக்கிறார்கள். அதே சுருள் முடி, பெரிய மீசை, அதே உடல் கட்டு... 60வது வயதை கடந்து இருப்பார் இவர் ஆனாலும் இவர் இன்னும் உடம்பை இவ்வளவு கட்டுக்கோப்பாக மெயின்டைன் பண்ணுகிறாரே? என்று பல இளைஞர்கள் கமெண்ட்களை பறக்க விடுகிறார்கள். ஒரு காலத்தில் திரையில் ஹீரோக்களுக்கு கடும் சவால் விட்ட வில்லனாக இருந்த கரிகாலன் இன்று பல வருடங்கள் கழித்தும் ரசிகர்களின் நினைவில் அதே இடத்தை பிடித்திருப்பது தான் இவருடைய சாதனை.


Click it and Unblock the Notifications
