விஜயகாந்த் தம்பி அனுப்பி வச்சிருக்காரு! பாவா லட்சுமணனுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் ராஜ் மோகன்
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் திரையில் வந்தாலே ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் இன்று உடல்நிலை குறைவாலும், பொருளாதார சிக்கல் காரணமாக மிகவும் நலிவடைந்த நிலையில் இருப்பது ரசிகர்களின் வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.
தங்குவதற்கு வாடகை வீடு கூட இல்லாமல் ஒருவருடைய ஆபீஸ் வாசலில் இருந்தபடி அவர் சில பேட்டிகள் கொடுத்திருந்தார். அது வைரலாகி வந்த நிலையில் தமிழக அரசின் அமைச்சர் ராஜ்மோகன் நேரடியாக பாவா லட்சுமணனை சென்று சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார் இந்த சந்திப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக்கி உள்ளது.
அமைச்சர் ராஜமோகன் செய்த உதவி
பாவா லட்சுமணின் கையைப்பிடித்து ஆறுதல் சொன்ன அமைச்சர், உங்களோட வீடியோவை நான் பார்த்திருக்கிறேன். அதுல நீங்க ரொம்ப உடைஞ்சு போய் பேசுறீங்க அதை பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது. விஜயகாந்த் சார் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று சொன்னீங்க இப்ப அந்த விஜயகாந்த் சாரோட தம்பியின் ஆட்சி நடக்குது.
வருத்தத்தில் இருக்கும் ரவி மோகன் பற்றி அதிர்ச்சி செய்தி.. “விஜயகாந்த்க்கு நடந்தது இப்போ இவருக்கா?” ஆவேசமான நடிகர்
நம்ம முதல்வர் கலைஞர்களை ஒருபோதும் கஷ்டப்பட விடமாட்டார் அதனால் தான் உங்களை உடனடியாக சந்தித்து தேவையான உதவிகளை செய்ய சொல்லி இருக்கிறார். அதற்காகத்தான் நானும் வந்திருக்கிறேன் என்று கூறினார். மேலும் பாவா லட்சுமணனின் பழைய காமெடி காட்சிகளை பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

பாவா லட்சுமணனுக்கு கிடைத்த உதவி
அதாவது "வாமா மின்னல் காமெடி" உட்பட "மாயி அண்ணே வந்திருக்காங்க மொக்கச்சாமி வந்திருக்காங்க" என்ற காமெடியில் நீங்க சொன்ன பாடி லாங்குவேஜ் அவ்வளவு அழகாக இருக்கும். உங்க அந்த காமெடிகளை இன்னும் மக்கள் மறக்கல. உங்க உடம்புல கலைத்தாயின் ஆசீர்வாதம் இருக்கு. நீங்க மீண்டும் நடிக்கணும் அதுக்கு தேவையான எல்லா உதவிகளையும் நாங்கள் செய்வோம் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.

கண் கலங்கிய நடிகர்
இந்த வார்த்தைகளை கேட்ட பாவா லட்சுமணன் கண் கலங்கி இருந்தார். நீண்ட நாட்களாக தனக்கு ஒரு உதவி கிடைக்குமா என்று காத்திருந்த அவருக்கு இப்போது முதலமைச்சர் மூலமாக ஒரு உதவி கிடைத்திருக்கிறது. சமீபத்தில் லெஜெண்ட் சரவணன் கூல் சுரேஷ் மூலமாக 2 லட்சம் ரூபாய் பண உதவி செய்திருந்தார். அப்போது கூட தான் சேர்ந்து நடித்த எந்த நடிகர்களும் கண்டு கொள்ளவில்லை என்று சொல்லி இருந்தார்.

குறிப்பாக முதலமைச்சர் விஜய் மனம் வைத்து ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார். இப்போது அந்த வேண்டுகோளுக்கு விடை கிடைத்திருக்கிறது. அந்த வீடியோவில், "விஜயகாந்த் சார் உயிரோட இருந்திருந்தா நான் இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்" என்று அவர் கண்ணீருடன் பேசியது பலரையும் நெகிழ வைத்தது. அந்த ஒரு வரியே ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இப்போது அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று ஆறுதல் கூறி, அரசு சார்பில் தேவையான உதவிகள் கிடைக்கும் என்று உறுதியளித்திருப்பதை பார்த்த ரசிகர்கள், "இதுதான் ஒரு கலைஞருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை", "சிரிக்க வைத்த மனிதரை சோகத்தில் விட்டுவிடக் கூடாது", "பாவா லட்சுமணன் மீண்டும் திரைக்கு வர வேண்டும்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.













Click it and Unblock the Notifications