ஆதவ் அர்ஜுனா பேசும்போது.. அப்படியே எஸ்கேப்பான அதிமுக தொண்டர்கள்! வெறிச்சோடிய இணைப்பு விழா!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களின் இணைப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக தொண்டர்கள் அப்படியே கொத்து கொத்தாக வெளியேறினர். இதனால் இணைப்பு விழா காத்து வாங்கியது.
அதிமுகவினர் தலைவர்கள் பலர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் என பலர் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டனர்.

வெளியேறிய தொண்டர்கள்
இந்த இணைப்பு விழாவில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் உள்ளிட்டோர் பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அதிமுகவினர் வெளியேறியது தவெகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதாவது முதலமைச்சர் விஜய்யை பார்க்கலாம் என்று சொல்லி புதுக்கோட்டையிலிருந்து ஆட்களை அழைத்து வந்திருக்கிறார் விஜயபாஸ்கர். கடைசியில் இந்த விழாவுக்கு விஜய் வரவில்லை. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த அதிமுகவினர், அரங்கத்திலிருந்து வெளியேறிவிட்டனராம்.
தவெகவின் பலம்
தவெகவின் பலம் விஜய்தான் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். விஜய் இல்லாத போராட்டங்கள், விஜய் பங்கேற்காத இயக்கங்களில் மக்களிடம் பெரிய வரவேற்பை பெறாது. காரணம் நடிகராக விஜய்யை திரையில் பார்த்து பிரமித்த மக்கள், அவர் பொதுவெளியில் வரும்போது அவரை பார்க்க திரள்கின்றனர். இது கட்சியின் பலமாக மாறியிருக்கிறது என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.
நிலைமை இப்படி இருக்கையில், இந்த விமர்சனங்களை உறுதி செய்யும் விதமாக விஜய் பங்கேற்காத இந்த இணைப்பு விழாவில் மக்கள் பெருமளவு வெளியேறி இருக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
விஜய் என்ன செய்ய வேண்டும்?
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில், அவர்தான் முதலமைச்சராக நீடித்தார். அதேபோல மக்கள் செல்வாக்கு அதிகமாக இருப்பதால், விஜய்யும் ஆட்சியில் நீடிப்பார் என்று தவெக எதிர்பார்க்கிறது. ஆனால், சித்தாந்தம் இல்லாத அரசியல் ஆபத்தானதுதான் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
விஜய்க்கு பிறகு கட்சியை காப்பாற்ற சித்தாந்தம் அவசியமாகும். எனவே அதை விஜய் தனது தொண்டர்கள் மத்தியில் வளர்க்க வேண்டும். அது செய்தால்தான் திமுக போன்ற பெரிய கட்சிகளை எதிர்த்து சண்டை செய்ய முடியும். அதுவரை இப்படியான காலி சேர்களையும், பாதியில் களையும் தொண்டர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications