68% பந்தை கண்ட்ரோல் எடுத்த ஸ்பெயின்.. கோல் போட பந்து நம்ம பக்கம் இருக்கணும்! கோட்டைவிட்ட அர்ஜென்டினா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 68% நேரம் பந்தை தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அதேபோல் ஸ்பெயின் அணி 803 பாஸ்கள் செய்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணி 445 பாஸ்கள் மட்டுமே செய்திருக்கிறது. அதேபோல் அர்ஜென்டினா அணி கோல் போட வெறும் 3 ஷாட்கள் மட்டுமே அடித்திருக்கிறது.

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று வரலாறு படைத்துள்ளது. 2010ஆம் ஆண்டுக்கு பின் ஸ்பெயின் அணி மீண்டும் வென்றுள்ளதால், அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தப் போட்டியில் முழுக்க முழுக்க ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியது என்றே சொல்லலாம்.

Lionel Messi fifa world cup argentina

வழக்கமாக கிரிக்கெட்டில் டாட் பால் ஆடாமல் ஒவ்வொரு ரன்னாக எடுத்தாலே, ஏதாவது ஒரு பந்தில் பவுண்டரி அடிக்க முடியும். அப்படிதான் கால்பந்து பந்தை நமது அணி வீரர்கள் கட்டுப்பாட்டில் வைத்தாலே, எளிதாக கோல் அடிக்க வாய்ப்புகள் உருவாக்க முடியும். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி அடிப்படையிலேயே தவறுகளை செய்தது.

அதாவது ஆட்டத்தின் ஒட்டுமொத்த நேரத்தில் 68% ஸ்பெயின் அணி பக்கம் தான் பந்து இருந்திருக்கிறது. இந்த உலகக்கோப்பை முழுவதும் ஸ்பெயின் அணி இப்படியான ஆட்டத்தை தான் ஆடி இருக்கின்றனர். அதேபோல் ஸ்பெயின் அணி 803 பாஸ்கள் செய்திருக்கிறது. ஆனால் அர்ஜென்டினா அணி 445 பாஸ்களை மட்டுமே செய்திருக்கிறது. அதிலும் ஸ்பெயின் அணி செய்த 90% பாஸ்கள் சரியாக அடிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் ஸ்பெயின் அணி மொத்தமாக கோல் அடிக்க 20 ஷாட்கள் அடித்திருக்கின்றன. அதில் கோல் போஸ்ட்டை நோக்கி 11 ஷாட்கள் இருந்தன. ஆனால் அர்ஜென்டினா அணி மொத்தமாகவே 3 ஷாட்களை தான் அடித்திருக்கிறது. அதில் ஒன்று கூட இலக்கை நோக்கி அடிக்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் அர்ஜென்டினா வீரர்கள் மோசமாக ஆடுவது களத்திலேயே தெரிந்தது.

இதனால் அந்த அணி வீரர்கள் ஏராளமான ஃபவுல்களில் ஈடுபட்டன. அதேபோல் பாஸ்களை அட்டாக் பக்கம் செலுத்தாமல், கோல்கீப்பர் பக்கமே அதிக பாஸ்கள் இருந்தன. இதன் மூலமாக நேரம் கடத்தலாம் என்று நினைத்து செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் அர்ஜென்டினா அணி போராடாமலேயே கோப்பையை தூக்கி கொடுத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+