தாம்பரம் - செங்கல்பட்டு, அரக்கோணம் - செங்கல்பட்டு, ஈரோடு - கரூர் .. ரயில் பயணிகள் கனவு நிறைவேறுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில்வே வாரியம் தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 4-வது புதிய ரயில் பாதைக்கு ரூ.713 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது.இப்போது புதிதாக, அரக்கோணம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய இரட்டை ரயில் பாதைக்கு ரூ.929 கோடியும், ஈரோடு - கரூர் இடையேயான இரட்டை ரயில் பாதைக்கு ரூ.934 கோடியும் என மொத்தம் 3 புதிய ரயில் பாதை அமைக்க ரூ.2,576 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் அதிகப்படியான வருவாயை ரயில்வே துறைக்கு ஈட்டித்தருவதில் தெற்கு ரயில்வே முக்கியமான இடத்தில் இருக்கிறது. இங்கு டிக்கெட் எடுக்காமல் பயணிக்கக்கூடாது என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாக இருக்கிறது. அது முக்கியமான காரணம். அதேபோல் ரயில் பாதை மற்றும் ரயில்வே பணிகள் எந்த அளவிற்கு முக்கியம் என்பது தொடர்பான விழிப்புணர்வும் மிக அதிகம்.

Tambaram Chengalpattu Erode Karur the dreams of train passengers are coming true

அதனால் தான் சென்னையில் புறநகர் ரயில் வழித்தடங்கள் தொடங்கி, சென்னை-கன்னியாகுமரி வரை இரட்டை வழித்தடம், கோவை வழியாக கேரளா வரை இரட்டை வழித்தடம், ஆந்திரா வழியாக செல்லும் வட இந்தியா வழித்தடம், பெங்களூர் வழித்தடம் என எல்லாமே எப்போதோ நடந்துவிட்டது. இன்னும் சில பகுதிகளில் நான்காவது மற்றும் இரட்டை வழித்தடங்களை நோக்கி நகருகிறது. அதற்கான முன்னெடுப்புகள் வேகமாக நடந்து வருகின்றன.

தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில் மற்றும் மின்சார ரயில்கள் என 1,400 ரயில்கள் இயக்கப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 152.75 கோடி பேர் ரயிலில் பயணம் செய்திருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.8,215 கோடி வருவாய் கிடைத்துள்ளதும் அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் ஒவ்வொரு ஆண்டும் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தெற்கு ரயில்வேயில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில் பாதை அமைத்தல், ரயில் நிலைய மேம்பாடு, சிறப்பு ரயில் அதிகரிப்பு போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. கூடுதல் ரயில் பாதை அமைப்பதன் மூலம் முக்கிய சந்திப்புகளில் நிலவும் கடும் நெரிசலை குறைத்து, ரயில்களின் தாமதத்தை குறைக்கவும் முடியும் என்பதால், தெற்கு ரயில்வே சார்பில் சில முக்கிய பகுதிகளில் கூடுதல் வழித்தடங்கள் அமைக்க ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைத்த நிலையில் அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மத்திய ரயில்வே வாரியம் தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 4-வது புதிய ரயில் பாதைக்கு ஏற்கனவே ரூ.713 கோடி ஒதுக்கியிருந்தது. அடுத்தாக அரக்கோணம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய இரட்டை ரயில் பாதைக்கு ரூ.929 கோடியும், ஈரோடு - கரூர் இடையேயான இரட்டை ரயில் பாதைக்கு ரூ.934 கோடியும் என தமிழ்நாட்டில் மொத்தம் 3 புதிய ரயில் பாதை அமைக்க ரூ.2,576 கோடிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

அடுத்தக்கட்ட பணிகளான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. கட்டமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக விரைவில் டெண்டர் வெளியிடப்பட இருக்கிறது. இந்த பணிகளை 2030-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதேபோல, மதுரை, திருச்சி மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகளிலும் புதிய பாதைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தால் தற்போது உள்ளதைவிட கூடுதலாக 50 சதவீதம் வரையில் ரயில்கள் இயக்க முடியும். இதனால் கூடுதலாக பயணிகள் ரயிலில் பயணிக்க முடியும் என்று ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+