'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது!
சென்னை: "என்னப்பா... அண்ணா சாலையில் புதுசா ஏதோ பில்லர் முளைச்சிருக்கே?" - இதுதான் இப்போதைய சென்னைவாசிகளின் லேட்டஸ்ட் அப்லோட். ஒரு பக்கம் மெட்ரோ ரயில் பறந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பிரம்மாண்டமான மேம்பாலங்கள் முளைத்து சென்னையின் ஸ்கைலைனையே (Skyline) மாற்றி வருகின்றன. மத்திய கைலாஷ் முதல் டி.நகர் வரை, சென்னையின் சாலைகள் இப்போது 'டபுள் டெக்' (Double Decker) மோடுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன.

அண்ணா சாலை: மெட்ரோவுக்கு மேலொரு பாலம்!
சென்னையின் இதயம் அண்ணா சாலை. இங்கே சைதாப்பேட்டை டூ சி.ஐ.டி நகர் வரை ஒரு வழியாகப் பாலம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. "அப்பாடா... ஒரு சிக்னலாவது குறைஞ்சதே!" என வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால், தேனாம்பேட்டை நோக்கிய பயணம் இன்னும் சவால்தான். மெட்ரோ ரயிலுக்கு இடையூறு இல்லாமல், அந்த இரும்புத் தூண்களுக்கு மேலே பாலம் கட்டுவது இன்ஜினீயர்களுக்கு ஒரு 'மிஷன் இம்பாசிபிள்' டாஸ்க்.
தற்போது டைவர்ஷன்களால் டிராபிக் கொஞ்சம் 'ஸ்லோ' என்றாலும், பாலம் முழுமையாக முடிந்தால் அண்ணா சாலை இன்னும் 'ஸ்பீடு' எடுக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்.
மத்திய கைலாஷ்: பெயரளவில் மட்டும் 'கைலாசமா'?
ஐடி ஊழியர்களின் ஃபேவரைட் ரூட்டான மத்திய கைலாஷில் பாலம் திறந்தாச்சு. ஓஎம்ஆர் (OMR) செல்பவர்களுக்கு இது பெரிய ரிலீஃப். ஆனால், பாலம் திறந்த சில நாட்களிலேயே "ரோடு ஏன் மேடு பள்ளமா இருக்கு?" எனப் புகார்கள் எழத் தொடங்கிவிட்டன. "பாலம் கட்டியது சரி, குவாலிட்டி எங்கே?" எனச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறந்தன. இப்போது அந்த சாலைகள் சரி செய்யப்பட்டு உள்ளன.
டி.நகர்: ஸ்டீல் ஸ்ட்ரக்சரில் ஒரு மேஜிக்!
டி.நகர் என்றாலே நெரிசல்தான் அடையாளம். ஆனால், தெற்கு உஸ்மான் ரோடு - சி.ஐ.டி நகர் இணைக்கும் புதிய மேம்பாலம் அந்த பிம்பத்தை உடைக்கப் பார்க்கிறது. வழக்கமான சிமெண்ட் பாலங்களுக்குப் பதில், 'ஸ்டீல் ஸ்ட்ரக்சர்' மூலம் இதை வேகமாகக் கட்டி முடித்திருக்கிறார்கள். வார இறுதி நாட்களில் திணறும் டி.நகருக்கு இது ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டர்!
லிஸ்ட்டில் அடுத்தது வேளச்சேரி!
அடுத்த டார்கெட் வேளச்சேரி மெயின் ரோடு. மால், ஆபீஸ், குடியிருப்புகள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்தப் பகுதியில் புதிய மேம்பாலப் பணிகள் விரைவில் சூடுபிடிக்க உள்ளன. கிண்டி டூ ஓஎம்ஆர் செல்லும் பயணிகளுக்கு இது பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பறக்கும் கார்கள்... தவிக்கும் பாதசாரிகள்!
பாலங்கள் கட்டப்படுவதால் கார்கள் பறக்கலாம், ஆனால் கீழே நடப்பவர்களின் நிலை? ஓஎம்ஆர் போன்ற இடங்களில் பாலம் பணிகளுக்காக 'நடை மேம்பாலங்கள்' (Foot Overbridge) அகற்றப்பட்டுள்ளன. சாலை கடப்பது என்பது இப்போது ஒரு சாகச விளையாட்டாக மாறிவிட்டது. "வண்டிக்கு வழி விடுறீங்க... மனுஷங்களுக்கு?" எனப் பாதசாரிகள் கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை.
ஜெமினி மேம்பாலம் கட்டப்பட்டபோது அது நவீன சென்னையின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. இன்று டஜன் கணக்கில் பாலங்கள் வந்தாச்சு. ஆனாலும், ஒரு இடத்தில் டிராபிக் குறைந்தால், அது அடுத்த ஜங்ஷனுக்குப் போய் நிற்கிறது. மேம்பாலங்கள் மட்டுமே தீர்வா அல்லது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது அவசியமா என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும்... இப்போதைக்கு, "சீக்கிரம் கட்டி முடிங்கப்பா... ஆபீஸ்க்கு லேட் ஆகுது!" என்பதுதான் சராசரி சென்னைவாசியின் மைண்ட் வாய்ஸ்!
-
நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்! -
பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.. எல்லாமே அடுத்தடுத்து உயருகிறதே.. இனி கட்டுப்படுத்தவே முடியாது! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
அண்ணா சாலை மேம்பாலப் பணி 68% நிறைவு.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் சவாலான கட்டுமானம் விறுவிறுப்பு! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்!












Click it and Unblock the Notifications