தமிழ்நாட்டின் காஸ்ட்லியான பாலம் இதுதான்.. மளமளவென முடிந்த பணிகள்.. சென்னையின் பொறியியல் அதிசயம்
சென்னை: சென்னை, தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை உயர்மட்டச் சாலைத் திட்டம், தமிழ்நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த மேம்பால கட்டுமானமாக உருவெடுத்துள்ளது. இதன் பணிகள் தற்போது 50% முடிந்துள்ளன. அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் இந்த உயர்மட்ட சாலை, சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ஒரு முக்கிய திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது. கீழே மெட்ரோ சுரங்கம் உள்ள நிலையில், அதற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். பொறியியல் அதிசயம் என்று சொல்லும் விதமாக, மெட்ரோ சுரங்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த சாலை அமைக்கப்படவுள்ளது.

இன்ஜினியரிங் அதிசயம் என்று அழைக்கப்படும் வகையில், பரபரப்பான அண்ணா சாலையில் 3.2 கி.மீ., நான்கு வழி உயர்மட்ட சாலைப் பணிகள் முடிந்தவுடன், தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே பயணிகள் 10 நிமிடங்களுக்குள் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பாலங்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்த சாலை ஒரு நீளமான பாலமாக அமைக்கப்பட உள்ளது.
அண்ணா சாலையில் உயர்மட்டச் சாலை
சென்னையில் அண்ணா சாலையில் உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்பார்க்கப்பட்டதை விட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இங்கு அமைக்கப்படும் தூண்கள் கான்கிரீட் இல்லாமல் இரும்பு தூண்களாக இருப்பதால், தூண்கள் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளன.
இதனால், வரும் நாட்களில் பணிகள் விரைவாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.
காஸ்ட்லி பாலம்
3.2 கி.மீ நீளமுள்ள இந்த நான்கு வழி மேம்பாலம், நாட்டின் முதல் மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே கட்டப்படும் உயர்மட்டச் சாலை என்ற பெருமையைப் பெறுகிறது. இதன் மொத்த கட்டுமானச் செலவு ₹621 கோடியாகும், ஒரு கிலோமீட்டருக்கான சராசரி செலவு ₹195 கோடியாக உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இதே காலகட்டத்தில், ஒரு கிலோமீட்டருக்கு ₹120 முதல் ₹130 கோடி செலவில் ஆறு வழி உயர்மட்டச் சாலைத் திட்டங்களை கட்டி வருகிறது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேனாம்பேட்டை உயர்மட்டச் சாலை திட்டம், NHAI-யின் திட்டங்களை விட சுமார் 50% அதிக செலவைக் கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மெட்ரோ சுரங்கத்திற்கு மேலே கட்டுவது மட்டும் நகரின் மையத்தில் கட்டுவது உள்ளிட்ட காரணங்கள் இவ்வளவு செலவு ஆகிறது.
தேனாம்பேட்டை சைதாப்பேட்டை உயர்மட்ட சாலை திட்டம்
இந்த மேம்பாலத்திற்கான அடித்தளம் சாலை மட்டத்திலிருந்து ஏழு மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படும். மேலும், இது சராசரியாக 20-28 மீட்டர் ஆழம் கொண்ட மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே அமைக்கப்படும். இது மெட்ரோ சுரங்கத்தை பாதிக்காது. இந்தியாவிலேயே முதல்முறையாக நிலத்தடி மெட்ரோ சுரங்கப்பாதை கொண்ட சாலையில் உயர்மட்ட தாழ்வாரம் கட்டப்படும்.
இந்த மேம்பாலம் வழியில் உள்ள முக்கிய சந்திப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள பேருந்து வழித்தடச் சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், CMRL-இன் தலைமை பொது மேலாளர் பணிகளை மேற்கொள்வதற்குப் பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வகுத்துள்ளார். இதில், சுரங்கப்பாதையில் கட்டுமானக் கழிவுகள் வெளியேறாமல் இருப்பதை கண்காணிப்பதற்கான கருவி வேலைகளை நிறுவுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அடங்கும்.
மெட்ரோ சுரங்கத்தை பாதிக்காது
மேலும், சி.எம்.ஆர்.எல்., மெட்ரோ நிலத்தடி கட்டமைப்புகள் மற்றும் மெட்ரோ பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரூ.500 கோடி காப்பீடு கோரி ஒப்பந்தம் செய்துள்ளது. ₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ., தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை பாலம் இருப்பதால், இடையில் நந்தனத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியதில்லை.
சென்னை அண்ணா சாலை
இனி நந்தனம் சிக்னல் தொல்லை இருக்காது. அண்ணாசாலைக்கு இந்த சாலையைப் பயன்படுத்துபவர்கள், இனி அந்தப் பாலத்தில் சென்றால் ஐந்து சிக்னல்களில் நிற்க வேண்டியதில்லை. இந்த பாலத்தில் பயண நேரம் அதிகபட்சம் ஐந்து நிமிடம்தான். அதுவே கீழே சாலையில் சென்றால் பயண நேரம் 15 நிமிடமாகும். பீக் நேரங்களில் இதைவிடக் கூடுதலாக இருக்கும்.
தி.நகர் செல்பவர்கள் கீழே சென்று விடுவதால், பாலத்தின் மேலே போக்குவரத்து நெரிசல் இருக்காது. சென்னையில் எலக்ட்ரானிக் சிட்டி பெங்களூர் பாலம், கொல்கத்தா மா பாலம் போன்ற பாலங்கள் இல்லை என்ற குறையை இந்த நீண்ட பாலம் போக்கும். இந்த திட்டத்திற்கு மாநில அரசு நிர்வாக ஒப்புதல் அளித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மாநில நெடுஞ்சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சமீபத்தில் ஏலம் கோரியது. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட் ரூ.525 கோடி. இது சராசரியாக ஒரு கி.மீட்டருக்கு ரூ.164 கோடி செலவாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications