தேர்தல் விதிமுறைகள் நீக்கப்பட்டதும்.. சென்னையே மாற போகுது.. தமிழக அரசின் மெகா முடிவு.. பலநாள் ஏக்கம்
சென்னை: ஜூன் மாதம் தேர்தல் விதிகள் தளர்த்தப்பட்ட பின் சென்னையில் புதிய சாலைகள் போடப்பட உள்ளன. கடந்த 1 மாதமாக சென்னையின் பல்வேறு சாலைகள் மில்லிங் செய்யப்பட்டு புதிய சாலைகள் போடும் பணிகள் நடந்து வந்தன.
சென்னையில் சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. புதிய சாலைகளை போடும் பணிகள் நடந்து வந்தன. ஆனால் தேர்தல் விதிகள் காரணமாக இவை முடக்கப்பட்டன. இதையடுத்து தேர்தல் முடிந்ததும் இந்த சாலைகள் மீண்டும் போடப்பட உள்ளன.

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, 1,188 கூடுதல் சாலைகளை மறுசீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. இப்பணி, ஒன்றரை மாதங்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் 10 சதவிகித சாலைகள் மீண்டும் வேறு வேறு காரணங்களுக்காக தோண்டப்படலாம் என்று கூறப்படுகிறது.
மற்ற திட்டங்களுக்காக சாலைகள் தோண்டப்பட்டால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். பல பேருந்து வழித்தடங்கள் உட்பட 10,000 சாலைகளை மறுசீரமைக்கும் பணி சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டது. பல சாலைகளில் பணி நடந்து வருகிறது.
நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் சுமார் 10% சாலைகள் வேறு வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக மீண்டும் தோண்டப்பட உள்ளது. பல பேருந்து வழித்தடங்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட சாலைகளை மறுசீரமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டது. ஆனால் இதில் 1000 சாலைகள் மீண்டும் தோண்டப்பட வாய்ப்பு உள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
நகரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் சுமார் 10% உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காக தோண்டப்பட உள்ளது. மார்ச் 20ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட இப்பணி, நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடரும். லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன், 1,188 கூடுதல் சாலைகளை மறுசீரமைக்கும் பணியை, குடிமை அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ளது. இப்பணி, ஒன்றரை மாதங்களுக்கு தொடரும். 2023-24ல் அடையாளம் காணப்பட்ட சாலைகளை 15 நாட்களில் மறுசீரமைப்போம். சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சாலைகள் ஏப்ரல் இறுதிக்குள் மீண்டும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய சாலைகள்: இது போக மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள் (லிங்க் ரோடு) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் பராமரிக்கப்படும் சாலைகளை இணைக்கும் வகையில் இந்த புதிய லிங்க் சாலைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக அடையாறு ஆற்றின் அருகே உள்ள இசைக் கல்லூரி அருகே டிஜிஎஸ் தினகரன் சாலை மற்றும் துர்காபாய் தேஷ்முக் சாலையை இணைக்கும் வகையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இணைப்புச் சாலை அமைக்க அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர்.
சாந்தோம், மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், சாந்தோம் ஹைரோடு போன்ற பல முக்கிய சாலைகளில் போக்குவரத்தை மாற்ற ரிங்க் ரோடு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.
இதேபோல், மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரும் அண்ணாநகர் பகுதி மக்கள், ஜவஹர்லால் நேருசாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வார்டு 104ல் உள்ள பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து வார்டு 90ல் உள்ள பாடி குப்பம் சாலையை இணைக்கும் வகையில் இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பணியால் குறைந்தது இன்னும் ஒரு வருடத்திற்கு அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடி குப்பம் ரோட்டில் இருந்து பிள்ளையார் கோயில் தெரு வரை 900 மீட்டர் தூரத்திற்கு செல்லும் இந்த இணைப்பு சாலை, மதுரவாயல், பூந்தமல்லி, வானகரம் ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும். இந்த வாகனங்கள் ரெயில் நகர் பாலத்தை கடந்து பூந்தமல்லி உயர் சாலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications