வாகன ஓட்டிகளே நோட் பண்ணுங்க.. தமிழ்நாட்டில் மாறிய 3 டிராபிக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்!
சென்னை: தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து தொடர்பாக முக்கியமான 3 விதிகள் கடந்த சில வாரங்களில் மாற்றம் அடைந்து உள்ளன. இதை கவனிக்காதவர்களுக்காக.. இந்த விதிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.
விதி 1: இனி புதிய கார்கள் மற்றும் பைக்குகள் வாங்கும் போது நிரந்தர நம்பர்கள் வழங்கும் வரை தற்காலிக நம்பர்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.. தற்காலிக நம்பர்கள் இல்லாமல் கார்களை வெளியே கொண்டு வர கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஷோரூமை விட்டு வெளியேறும் கார்களுக்கு தற்காலிக பதிவு எண் இருக்க வேண்டும். சிறப்பு உரிமத் தகடுகளைப் பெறுதல், காரில் மாற்றங்களைச் செய்தல் அல்லது வெவ்வேறு மாநிலங்களில் பதிவு செய்தல் போன்ற விஷயங்களுக்கு இந்த தற்காலிக எண் உதவுகிறது.
விதி எண்: இந்த தற்காலிக எண்ணை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விதிகள் உள்ளன. சட்டத்தின் படி, அதை தெளிவாகக் காட்ட வேண்டும். மஞ்சள் பின்னணியில் சிவப்பு எண்களை வைத்திருப்பதே சரியான வழி. ஆனால், பல புதிய கார்களில் வெறுமனே மஞ்சள் காகிதம் அல்லது சிவப்பு எண்கள் கொண்ட ஸ்டிக்கர் உள்ளது, இது விதிகளைப் பின்பற்றவில்லை.
இவை முறையாக நம்பர் பிளேட் வடிவத்தில் இருக்க வேண்டும். மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி காரின் முன்பக்கத்திலும், பின்புறத்திலும் தற்காலிக எண்ணைக் காட்ட வேண்டும். தெளிவான நம்பர் பிளேட் தகடு இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது என புதிய மோட்டார் வாகனத் சட்டம் தெரிவித்துள்ளது.
இனிமேல் நம்பர் பிளேட்களில் for registration என்பதற்கு பதிலாக மஞ்சள் பிளேட்டில் சிவப்பு நம்பர் கொண்ட தற்காலிக நம்பர் இருக்க வேண்டும்.
விதி 2: இனி லைசன்ஸ் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலம் வழங்க போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது அதன்படி ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே ஆன்லைன் மூலம் பணிகளை மேற்கொள்ள முடியும்.
இதை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறையில் அனைத்து ஊழியர்களும் கணினி பயன்படுத்தும் வகையில் கொடுத்தால் கணினிகள் வழங்கப்படும். காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு அரசு புதிய திட்டங்களை வெளியிட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக 2,213 டீசல் பேருந்துகள், காற்று மாசைக் கட்டுப்படுத்த 500 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். ஜெர்மனி வங்கி நிதி உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் ஆர்டிஓ சைட்டில் எல்எல்ஆர் கட்டணம் செலுத்தும் வசதி நீண்ட நாட்களாக முடங்கிய நிலையிலேயே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் எல்எல்ஆர் போட முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆதார் அத்தென்டிகேஷன் முடிந்தாலும் கூட பணம் செலுத்த முடியாத கடினமான சூழல் நிலவி வருகிறது.
விதி 3: 18- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தால், அந்த வாகனத்தின் பதிவை (Registation) நிறுத்தி வைப்போம் என்று தமிழ்நாடு போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விடுத்துள்ள எச்சரிக்கையில், 8- வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்? 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி.
12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்தி வைக்கப்படும். கவனம் தேவை பெற்றோர்களே என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications