ஃபாஸ்டாக் ரூல்ஸ் மாறுகிறது.. டேக் இல்லாமல் இனி டோல் கேட்டை கடக்கவே முடியாது? வருகிறது புது ரூல்?
சென்னை: 2026 ஏப்ரல் 1 முதல், ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் அனுமதி இல்லை, கேஷ் கொடுத்து டோல் கேட்டை கடக்க முடியாது என்று புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது.
இப்போது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது. அதன்படி ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்களுக்கு இப்போது இரட்டை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்கள் ரொக்கமாக சுங்கக் கட்டணம் செலுத்தினால், வழக்கமான கட்டணத்தை விட இரண்டு மடங்கு செலுத்த வேண்டும். ஆனால், யுபிஐ அல்லது பிற டிஜிட்டல் முறைகள் மூலம் பணம் செலுத்தினால், வழக்கமான கட்டணத்தில் 1.25 மடங்கு மட்டுமே வசூலிக்கப்படும்.
ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்கள்
முன்னதாக, ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்கள் ரொக்கமாகவும், யுபிஐ மூலமாகவும் செலுத்தினாலும் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. உதாரணமாக, ஒரு சுங்கக் கட்டணம் ரூ. 100 எனில், ஃபாஸ்டாக் இல்லாத வாகனம் ரொக்கமாக ரூ. 200 செலுத்த வேண்டும். ஆனால், யுபிஐ மூலம் செலுத்தினால், ரூ. 125 மட்டுமே செலுத்தினால் போதும்.
இது ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து, டிஜிட்டல் முறைகளை ஊக்குவிப்பதாகும். இதனால் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, பயணத்தை வேகமாகவும் சீராகவும் மாற்றும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள்
ரொக்கப் பணத்தை விட டிஜிட்டல் முறைகளுக்கு குறைவான கட்டணம் வசூலிப்பதன் மூலம், மக்களை ஃபாஸ்டாக் அல்லது யுபிஐ போன்ற டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களுக்கு மாற தூண்டுவது அரசின் திட்டமாகும்.
ஆனால் வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதியும் மாற்றம் அடையும் என்கிறார்கள். 2026 ஏப்ரல் 1 முதல், ஃபாஸ்டாக் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் அனுமதி இல்லை, கேஷ் கொடுக்க முடியாது, ஒன்று டேக் பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் அபராததோடு UPI வழியாக செலுத்த வேண்டும் என்று புதிய விதிமுறை அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது ஃபாஸ்டாக் இருந்தால் மட்டுமே அதை பயன்படுத்தி டோல் கேட்டை கடக்க முடியும். கேஷ் செலுத்தி.. ஃபாஸ்டாக்கை கடக்க முடியாது. அந்த அளவிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது.
FASTag வருடாந்திர பாஸ்
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயணத்திற்காக, FASTag வருடாந்திர பாஸ் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பாஸ் பயணிகளுக்கு பணத்தை சேமிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பயணத்தை மேலும் வசதியாகவும், மன அழுத்தமின்றியும் மாற்றுகிறது. நாடு முழுவதும் சுமார் 1,159 சுங்கச்சாவடிகளில் இது செல்லுபடியாகும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) நான்கு நாட்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான FASTag அடிப்படையிலான வருடாந்திர சுங்கச்சாவடி அனுமதிகளை விற்பனை செய்து, ₹150 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. தமிழகம் அதிக எண்ணிக்கையிலான வருடாந்திர பாஸ்களை வாங்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்கள் உள்ளன.
கூடுதலாக, FASTag வருடாந்திர பாஸ்களைப் பயன்படுத்தி தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுங்கச்சாவடிகளில் அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக NHAI தெரிவித்துள்ளது.
வருடாந்திர சுங்க பாஸ் என்பது ஒரு ப்ரீபெய்ட் வசதியாகும். இதன் மூலம் தனியார் வாகன ஓட்டிகள் ஒருமுறை கட்டணம் செலுத்தி, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேகளில் உள்ள 200 சுங்கச்சாவடிகள் வரை இலவசமாக பயணிக்கலாம். ஒவ்வொரு பாஸின் விலையும் ₹3,000. இந்த வசதி கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்குக் கிடைக்கிறது.
இந்த பாஸ், செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு அல்லது 200 சுங்கச்சாவடி பயணங்களுக்கு, எது முதலில் வருகிறதோ அதுவரை செல்லுபடியாகும். பயண வரம்பு எட்டப்பட்டதும், FASTag தானாகவே நிலையான பயணக் கட்டண முறைக்கு மாறும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications