இனி ஸ்பாட் பைன்.. அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும்.. சென்னை மாநகராட்சி பரபரப்பு முடிவு.. கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்னும் இரண்டு நாட்களில், சென்னையில் பல்வேறு விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் ஸ்பாட் பைன் முறையை கொண்டு வர உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன்.போடப்படும்

மாநகராட்சி நிர்வாகிகள் இதற்காக பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகளைப் பயன்படுத்தி அபராதத் தொகையை வசூலிப்பார்கள். இந்த சாதனங்களைப் பயன்படுத்தி சொத்து வரி கூட வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

automobile chennai parking

இதற்காக சுமார் 500 பிஓஎஸ் கருவிகள் வாங்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, சாலை விதிகளை மீறும் போது போக்குவரத்து காவலர்கள் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல் பல்வேறு குடிமை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எப்போது அமல்படுத்தப்படும்: இன்னும் இரண்டு நாட்களில், சென்னையில் பல்வேறு விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் ஸ்பாட் பைன் முறையை கொண்டு வர உள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன்.போடப்படும்

இதற்காக UPI, டெபிட்/கிரெடிட் கார்டுகள், டிமாண்ட் டிராஃப்ட்கள் அல்லது காசோலைகள் மூலம் பணம் செலுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து GCC சாதனங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. இதனால் பைன் நேரடியாக மாநகராட்சிக்கு செல்லும். அதிகாரிகள் பணம் சுருட்ட வாய்ப்பு இல்லை. மாநகராட்சி வருவாயும் உயரும்.

மாநகராட்சி பாதுகாப்பு மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நிர்வாக மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் GCC இல் உள்ள வார்டு உதவி பொறியாளர்கள் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள். இது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிகளை மீறுபவர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும். இதற்காக 15 பறக்கும் படை வாகனங்கள் களமிறக்கப்படும். இந்த சாதனங்கள் இப்போது களமிறக்கப்பட்டு வருகிறது.

ஸ்பாட் அபராதம் விதிப்பதற்காக இன்னும் இரண்டு நாட்களில் அவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைப்போம், என்று GCC கமிஷனர் ஜே குமரகுருபரன் கூறி உள்ளார், வாடகைத் தொகை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. முன்னதாக, அபராதத் தொகையை டிமாண்ட் டிராஃப்ட் அல்லது காசோலையாக வசூலிக்க காகித சலான்கள் வழங்கப்பட்டன. இனி ஸ்பாட் பைன் போடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன் சலான்கள் வழங்கப்பட்ட பிறகு பரிவர்த்தனைகளை முடித்து டேட்டாவை அப்லோட் செய்ய ஓரிரு நாட்கள் ஆகும். ஆனால் POS சாதனங்கள் நிகழ்நேர பரிவர்த்தனைகளை உடனுக்குடன் அப்லோட் செய்ய முடியும்.

சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன்.போடப்படும்

வாகன பார்க்கிங்: அதேபோல் சென்னையில் சாலை ஓரங்களில் பார்க் செய்யப்படும் வாகனங்களை கண்காணிக்க எக்ஸ் ஃபோர்ஸ் படைகளை தமிழ்நாடு அரசு களமிறக்கி உள்ளது.

அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் தவறான நிர்வாகம் என்ற பல புகார்களுக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி தற்போது தமிழ்நாடு முன்னாள் போலீஸ் அதிகாரிகளின் "எக்ஸ் போர்ஸ்" படையை களமிறக்கி உள்ளது.

சென்னையில் உள்ள 14,000-க்கும் மேற்பட்ட தெரு பார்க்கிங் வசதிகளை நிர்வகிக்கும் வகையில் முன்னாள் போலீஸ் அதிகாரிகளை களமிறக்கி உள்ளது. இப்போது பார்க்கிங்கின் நிர்வாகத்தை சிவில் அமைப்பே நேரடியாகக் கையாண்டு வருகிறது. இரு சக்கர வாகனத்திற்கு ரூ.5 மற்றும் காருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+