வரி கம்மின்னு EV வண்டி வாங்க நினைச்சவங்களுக்கு ஷாக்! ஜிஎஸ்டி வரியை தடாலடியாக உயர்த்த திட்டம்
டெல்லி: நாட்டில் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்கள் (EV) (இவி) வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி வெறும் 5% ஆக உள்ள நிலையில் பயன்படுத்தப்பட்ட இவிகள் மீதான இந்த அதீதமான வரி விதிப்பு வாகனங்கள் மறுவிற்பனை துறையை கடுமையாக பாதிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டிசம்பர் 20, 21-ந் தேதிதிகளில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த கூட்டத்தில் நடைமுறையில் உள்ள வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. இந்தக் கூட்டத்தில் பழைய மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியில் அதிரடியான மாற்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதியதாக வாங்கப்படும் மின்சார வாகனங்களுக்கு தற்போது வெறும் 5%தான் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் மின்சார வாகனங்களை வாங்குவதில் பொதுமக்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மின்சார வாகன உற்பத்தி துறையும் பெருமளவு வளர்ச்சி கண்டு வருகிறது.
ஆனால் பழைய மின்சார வாகனங்கள்- பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த 12% ஜிஎஸ்டி வரியை 6% கூடுதலாக அதாவது 18% ஆக உயர்த்துவதற்கு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார வாகனங்களின் மறுவிற்பனை என்பது மிக மோசமான பாதிப்பை சந்திக்கக் கூடும் என எச்சரிக்கப்படுகிறது. பொதுவாக பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறயில் இருந்து வருகிறது. அதே வரிவிதிப்பை பழைய மின்சார வாகனங்களுக்கும் விதிக்கப்படுகிற நிலையில், ஒட்டுமொத்தமாக ரீ சேல் எனப்படுகிற மறுவிற்பனை துறையில் ஈடுபட்டிருப்போர் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.
காப்பீட்டுத் திட்டங்கள் வரி குறைப்பு?: இதேபோல ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் தவணை தொகை மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது அல்லது வரிவிதிப்பையே கைவிடுவது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தில் அண்மையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் தவணை தொகை மற்றும் ஆயுள் காப்பீடு மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது ரூ5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீட்டு தவணை தொகைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பது; இதற்கு மேலான காப்பீட்டு தவணை தொகைக்கு 18% வரி விதிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 20,21-ல் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுப்போம் என தெரிவித்திருந்தார். இது நடைமுறைக்கு வரும் போது பாலிசிதாரர்களுக்கான காப்பீட்டு தவணை தொகை குறையும் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications