டிசம்பர் தள்ளுபடியில் கார் புக் பண்ணலாமா? ரீசேல் டைமில் ரேட் குறையுமா? சமாளிக்க 2 சிம்பிள் ட்ரிக்ஸ்!
சென்னை: ஆண்டின் கடைசியில் கார் நிறுவனங்கள் தரும் டிஸ்கவுண்ட் விற்பனையை நம்பி நம்பி கார் வாங்கலாமா, அல்லது ஜனவரியில் டிஸ்கவுண்ட் இல்லாமல் கார் வாங்கிக்கொள்ளலாமா... ஜனவரிக்கு பிறகு வாங்குவதால் தள்ளுபடி தொகையை இழந்தாலும், ஆண்டு அடிப்படையில் அது இளமையான காராக கருதப்படுமே என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். இதில் 2 சிம்பிள் ட்ரிக்ஸ்கள் உள்ளன. இதை ஃபாலோ செய்தால் உங்களுக்கு கண்டிப்பாக லாபம் கிடைக்கும்.
ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருக்கலாம்.. ஒவ்வொரு வருடமும், நவம்பர் முதல் அனைத்து கார் கம்பெனிகளும் சொல்லி வைத்தது மாதிரி டிஸ்கவுண்ட் விற்பனையை ஆரம்பித்து விடுவார்கள். சில ஆயிரங்கள் தொடங்கி சில லட்சங்கள் வரை கூட இப்படி தள்ளுபடி செல்வதை பார்த்திருக்கக்கூடும். அது ஏன், வருட கடைசியில் இதுபோன்று தள்ளுபடி வழங்குகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆம்.. வாகனத்தை பொருத்த அளவில் மாதம் அல்லது நாள் என்பது இங்கு எக்ஸ்பைரி கிடையாது. வருடம் தான் முக்கியம்.

டிசம்பர் 31-ஆம் தேதி வாங்கக்கூடிய ஒரு வாகனம் மற்றும் ஜனவரி 1-ஆம் தேதி வாங்கக்கூடிய வாகனத்திற்கு நடுவே ஒரு நாள் தான் இடைவெளி இருந்த போதிலும், மறு விற்பனை என்று வரும்போது அது ஒரு வருட பழைய வண்டியாகத்தான் கருதப்படும். எனவே அதன் விற்பனை மதிப்பில் பெருமளவுக்கு பணத்தை இழக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்கள் இந்த ரிஸ்க் எடுப்பதால்தான் வாகன நிறுவனங்கள் வருடக் கடைசியில் தள்ளுபடியை வாரி வழங்குகின்றன. ஏற்கனவே உற்பத்தியாகி இருக்கக்கூடிய வாகனங்களை எப்படியாவது தள்ளுபடி வழியில் விற்று விட்டால் அடுத்த வருடம், அதை வாங்க ஆளில்லாமல் போவதால் ஏற்படும் தலைவலியிலிருந்து தப்பிக்கலாம் என்பது வாகன உற்பத்தியாளர்கள் நோக்கம்.
லாபம் எது: அதே நேரம் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு இதில் என்ன லாபம் என்பதை யோசித்து அதன் பிறகு புக் செய்வது நல்லது. கார்களைப் பொறுத்த அளவில் ஷோரூமிலிருந்து வெளியே வந்த அடுத்த நிமிடமே, அதன் மதிப்பு சட்டென்று குறைந்துவிடும். 15 லட்சம் ரூபாய்க்கு காரை வாங்கினாலும், ஷோரூமை விட்டு வெளியே வந்ததும், மறு விற்பனையில் அதன் மதிப்பு 13 லட்சத்திற்கு போய்விடும். அடுத்த வருடத்தில் கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீதம் அளவுக்கு மதிப்பு குறையும். மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு வேகமாக குறையக் கூடிய காரின் மதிப்பு ஐந்து வருடங்களுக்கு பிறகு ஓரளவுக்கு நிலையானதாக வந்து நிற்கும், எனவே குறைந்தது ஐந்து வருடங்கள் ஒரு காரை ஓட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் வருட இறுதியில் தரப்படும் தள்ளுபடி விலையை பயன்படுத்திக் கொண்டு காரை வாங்கி விடலாம்.
நீண்ட காலம்: அதேநேரம், மூன்று வருடங்களுக்கு உள்ளாக இன்னொரு காரை வாங்குவதற்காக, இப்போது இருக்கக்கூடிய காரை விற்பனை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வருட கடைசியில் அளிக்கப்படும் தள்ளுபடியை நம்பி வேண்டாம் என்பது ஆட்டோமொபைல் துறையில் உள்ள வல்லுநர்கள் கருத்து. நீண்ட காலமாக காரை வைத்திருக்க நினைப்பவர்கள் மட்டும் தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளுங்கள். ஏனெனில் குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு காரின் மதிப்பு வேகமாக இறங்கிப்போகாது.
சிம்பிள் ட்ரிக்ஸ்: இன்னொரு சிம்பிள் ட்ரிக்ஸையும் நீங்கள் பயன்படுத்தலாம். வழக்கமான விலையில் இருந்து குறைந்தபட்சம் 50 ஆயிரத்துக்கும் மேலே தள்ளுபடி விலையில் வாகனங்களை தந்தால், பிற்காலத்தில் அதன் மதிப்பு குறைந்தாலும் உங்களின் அந்த மதிப்பு இழப்பை ஈடு செய்ய கூடிய தொகையாக இது வந்து நிற்கும். புது வருடத்தில் பல கார்கள் அப்டேட் வெர்ஷனை களமிறக்குவார்கள். அந்த வசதிகளையும் நீங்கள் தியாகம் செய்ய, குறைந்தது 50 ஆயிரம் என்பது ஒரு கணக்கு. உதாரணத்திற்கு கிரெட்டா எஸ்யூவி கார் ஜனவரி 16ம் தேதி ஃபேஸ்லிப்ட் செய்கிறது. அப்போது 360 டிகிரி கேமரா உட்பட பல வசதிகளை தருகிறது. அதை டிசம்பரில் கிரெட்டா வாங்குவோர் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். கியா ஷெல்டாஸ் முன் இருக்கையில் உள்ளோருக்கு 2 ஜோன் ஏசி (டிரைவருக்கு ஒரு கூலிங் அளவு, பக்கத்தில் இருப்பவருக்கு தனி கூலிங் அளவு), பேனராமிக் சன்ரூப் வசதிகளை ஃபேஸ்லிப்டில் தந்துள்ளது. ஆனால் பழைய ஷெல்டாசில் அந்த வசதி இல்லை. எனவே, 15 லட்சத்திற்கு குறைவான மதிப்புள்ள கார்களுக்கு, 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட டிஸ்கவுண்ட் தருகிறார்கள் என்றால் நம்பி வாங்கலாம். விலை உயர்ந்த கார்களுக்கு டிஸ்கவுண்ட் மதிப்பும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். 50 ஆயிரத்துக்கு கீழே டிஸ்கவுண்ட் கொடுத்ததால் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் அடுத்த வருடம் அதாவது ஜனவரி மாதத்தில் காரை வாங்கி கொள்ளலாம் என்று தாராளமாக காத்திருக்கலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications