வெறும் ரூ 45 ஆயிரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் வேண்டுமா? மனம் இருந்தால் "மார்கபந்து"! நம்பலையா?
திருவனந்தபுரம்: வெறும் ரூ 45 ஆயிரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரை கேரள இளைஞர் ஒருவர் உருவாக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ் எனும் கார்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த கார் மற்ற சொகுசு கார்களை விட விலை குறைவாக இருந்தாலும் இந்த கார்களுக்கு மவுசு அதிகம்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு. வாகனம் வாங்குவதில் அவரவர் வசதிக்கேற்ப மாறுபடும். சிலருக்கு சைக்கிள் வாங்கும் கனவு, சிலருக்கு டிவிஎஸ் 50, சிலருக்கு பெரிய வண்டிகள், இன்னும் சிலருக்கு ஜாவா பைக்குகள், ஹார்லி டேவிட்சன் இப்படி பட்டியல் நீளும்.
வசதியானவர்களுக்கு வெளிநாட்டு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். தேர் போல கார் என்போமே அது இந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு கச்சிதமாக பொருந்தும். சினிமா நடிகர், நடிகைகளும் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்குகிறார்கள். இதன் விலை கோடிகளை தொடும். ஆனால் கேரளாவில் இளைஞர் ஒருவர் மாருதி 800 காரை ரோல்ஸ் ராய்ஸ் காராக மாற்றியுள்ளார்.

திருவனந்தபுரத்தை சேர்ந்த இளைஞர் ஹதீப் (18). இவரிடம் மாருதி 800 கார் உள்ளது. ஆட்டோமொபைல் துறை மீது அதிக ஆர்வம் கொண்ட ஹதீப்புக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் மீது ஆசை அதிமாக இருந்தது. ஆனால் அதை வாங்குவதற்கு அவ்வளவு பணம் இல்லை. அதனால் என்ன செய்யலாம் என யோசித்த அவருக்கு கஸ்டமைசேஷன் என்ற ஒரு சொல் நினைவுக்கு வந்தது.
நாமே ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் மாடலை ஏன் உருவாக்கக் கூடாது என நினைத்தார். இதற்காக அவர் தனது மாருதி 800 கார் முழுவதையும் மாற்றியுள்ளார். இவை அனைத்தையும் வெறும் ரூ 45 ஆயிரத்திற்குள் முடித்து காட்டியுள்ளார். அதிலும் காரின் முன்புறம் இருக்கும் லோகோவான spirit of Ecstasy சிலையையும் வைத்துள்ளார்.
இதனால் அவர் உருவாக்கிய காரை பார்க்கும் போது அசல் ரோல்ஸ் ராய்ஸ் கார் போன்றே இருக்கிறது. காரின் வெளிப்புற தோற்றத்தை மட்டும் அவர் மாற்றவில்லை. காரின் உள்ளேயும் பிஎம்டபிள்யூ சொகுசு காரில் உள்ளது போல் வசதிகளை செய்துள்ளார். இதற்காக அந்த காரில் ஏற்கெனவே இருந்த மாற்றங்களை நீக்கியிருக்கிறார்.
வெளித்தோற்றம் மெட்டல் ஷீட் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் ஹெட்லைட், இன்டிகேட்டர் ஆகியவையும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்டைலில் உள்ளன. புதிதாக சேர்த்த உள் பாகங்கள் அனைத்தையும் தானே தயாரித்து இணைத்துள்ளார். இப்படி சாதாரண மாருதி சுசுகி 800 காரை ரோல்ஸ் ராய்ஸ் கார் போல மாற்ற இவருக்கு ரூ 45 ஆயிரம் மட்டுமே தேவைப்பட்டது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications