மதுரை மக்களின் பல வருட ஏக்கம்.. இனி சல்லுன்னு பறக்கலாம்.. வருகிறது பிரம்மாண்ட சாலை.. எங்கே தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மற்றும் திண்டுக்கல் நகரங்களுக்கு இடையிலான பயணத்தை விரைவுபடுத்தும் நோக்கில், நத்தம் வழித்தடத்தை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் இப்பாதையில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பயணம் விரைவாகும்.

மதுரை-நத்தம் பகுதி ஏற்கனவே மேம்பாலத்துடன் கூடிய அகலப்படுத்தப்பட்ட சாலையாக உள்ளது. தற்போது நத்தம்-திண்டுக்கல் இடையே உள்ள 38 கி.மீ. சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்குவதன் மூலம் முழுமையான இணைப்பு கிடைக்கும். தற்போதுள்ள சமயநல்லூர்-வாடிப்பட்டி வழித்தடத்தை விட சுமார் 15 கி.மீ. கூடுதல் தூரம் இருந்தாலும், இந்த மேம்படுத்தப்பட்ட சாலை பயண நேரத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

automobile

மதுரை-நத்தம் சாலை

நத்தம்-திண்டுக்கல் வழித்தடத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க ஆலோசகர்களை நியமிப்பதற்கான ஏலங்கள் கோரப்பட்டுள்ளதாக NHAI தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் தாமரைப்பட்டியில் இருந்து டி. புதுப்பட்டி வரையிலான வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டத்திற்கான டி.பி.ஆர் தயாரிப்புக்கான ஏலங்களையும் NHAI வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் மதுரை மண்டலத்தின் சாலை உள்கட்டமைப்பை கணிசமாக மேம்படுத்தும் என்று NHAI தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இந்த மேம்பாட்டுத் திட்டத்தை பயணிகள் மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். மதுரை-நத்தம் பகுதி திண்டுக்கல்லுக்குச் செல்லும் விரைவான வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்று போக்குவரத்து ஆர்வலர் டி. நாகேஸ்வரன் சுட்டிக்காட்டினார். "நத்தம்-திண்டுக்கல் வழித்தடமும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டால், இது மிகவும் திறமையான வழித்தடமாக மாறும் என்று NHAI தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மாற்று மார்க்கமாக, மாநில நெடுஞ்சாலைத் துறை மதுரை-சமயநல்லூர்-திண்டுக்கல் வழித்தடத்திலும் பணியாற்றி வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் முடிந்தவுடன், இந்த மண்டலத்திற்கு இரண்டு நகரங்களுக்கு இடையே இரண்டு பயண வழிகள் கிடைக்கும்.

மதுரை-நத்தம் விரிவாக்கத்திற்காக ஏராளமான மரங்களை இழந்தோம். நத்தம்-திண்டுக்கல் பகுதியிலும் அடர்ந்த மரங்கள் உள்ளன. இந்த சுற்றுச்சூழல் இழப்பை ஈடுசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார். இந்த மேம்பாட்டுத் திட்டம் மண்டல இணைப்பை வலுப்படுத்தும் என்று மதுரை NHAI தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

சென்னை மதுரை சாலை

சென்னை மற்றும் மதுரை நகரங்களுக்கு இடையிலான புதிய விரைவுச்சாலை திட்டம் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த மாத இறுதிக்குள் திட்டப் பணிகள் ஆரம்பமாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளுடன் இது செயல்படுத்தப்படும்.

பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் விரைவுச்சாலைகள் மிகக் குறைந்த அளவில் உள்ளன. அந்த குறையை போக்கும் வகையில் இந்த சாலை அமைய உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இத்திட்டத்தை ₹26,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கிறது. இந்த கிரீன்ஃபீல்ட் விரைவுச்சாலை சென்னை, திருச்சி, மதுரை ஆகியவற்றை இணைக்கும். தற்போதைய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள போக்குவரத்து நெரிசல் இதன்மூலம் குறையும்.

சென்னை மதுரை விரைவுச்சாலை திட்டம்

இந்த விரைவுச்சாலை மதுரை மாநகரிலிருந்து புறப்பட்டு திருச்சி வழியாக சென்னை வரை செல்கிறது. திருச்சி உட்பட ஐந்து முதல் ஆறு நகரங்களில் மட்டுமே வெளியேறும் வழிகள் இருக்கும். சென்னைக்கும் மதுரைக்கும் இடையிலான பயண நேரம் ஆறு மணி நேரமாகக் குறையும்.

சென்னை முதல் திருச்சி வரையிலான பயண நேரம் தற்போதைய ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திலிருந்து 2.5 அல்லது 3 மணி நேரமாக குறையும். அதிகபட்சமாக நான்கு மணி நேரத்திற்குள் பயணிக்க முடியும். சுமார் 470 கி.மீ தூரமுள்ள இச்சாலை தாம்பரம் அல்லது சிங்கப்பெருமாள் கோவிலில் தொடங்கி மதுரை வரை நீளும். தற்போதைய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள போக்குவரத்து நெரிசல் இதன்மூலம் குறையும்.

தமிழ்நாடு விரைவுச்சாலை மேம்பாடு - முதல்முறை மிக நீண்ட சாலை

இச்சாலைக்கான ஆய்வுப் பணிகள் இந்த மாதமே தொடங்கவுள்ளன. அடுத்த மாத இறுதிக்குள் இதன் விரிவான திட்ட அறிக்கை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை-திருச்சிக்கு இடையிலான ஆறு வழிச் சாலைப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தப்புள்ளி விரைவில் வெளியிடப்படும். இந்தச் சாலை மதுரை வரை நீட்டிக்கப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி ஏற்கெனவே துவங்கிவிட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இந்தியாவில் விரைவுச்சாலை கட்டுமானத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது என்ற கருத்து பரவலாக உள்ளது. வட மாநிலங்கள் இத்துறையில் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த நிலையைச் சரிசெய்யும் நோக்கில் மதுரை-சென்னை விரைவுச்சாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 2024 நிலவரப்படி, இந்தியாவில் 5,173 கி.மீ நீளமுள்ள 48 விரைவுச்சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் 8,772 கி.மீ விரைவுச்சாலைகள் தற்போது கட்டுமானத்தில் உள்ளன. 2014 ஆம் ஆண்டில் வெறும் 1,021 கி.மீ விரைவுச்சாலைகளே இருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+