உங்க கிட்ட கார், பைக் இருக்கா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. ரூ.4000 ஃபைன்.. ரொம்ப முக்கியம்
சென்னை: புதுச்சேரியில் மோட்டார் வாகனங்களுக்கு 3ஆம் நபர் காப்பீடு செய்யாவிடில் ₹2000, ₹4000 அபராதம் - போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காப்பீடு இல்லாத வாகனங்கள் கண்டறியப்பட்டால் முதன்முறை குற்றத்திற்கு ₹2,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குற்றம் தொடர்ந்தால் ₹4,000 அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று புதுச்சேரி போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலும் இதேபோல் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து விதிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சாலை விதிகளை பலர் மீறுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
விதி மீறல்: டிடிஎப் வாசன் போன்றவர்கள் சாலைகளில் அபாயகரமாக ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை போலீசாரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
முக்கியமாக சென்னையில் அதிகம் இப்படி நடக்கிறது. அதோடு சிலர் சாலைகளில் அபாயகரமான ஸ்டண்ட்களை செய்வதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து விதி மீறல் செய்பவர்களை கண்காணிக்க, அவர்களுக்கு அபராதம் விதிக்க புதிய வழிமுறை ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.
புதிய விதி: இந்த நிலையில்தான் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், வண்ண விளக்குகளை பொருத்தி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வாகனங்களில் பல வண்ண விளக்குகள் பொறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பல வண்ண ஒளி விளக்குகள் எதிரில் வரும் வாகன ஓட்டுநரின் கவனத்தை சிதறடிப்பதால் போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சோதனையின் போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னையில் வாகனங்களுக்கான வேக வரம்புகளை நிர்ணயித்து போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
வரம்பு என்ன: அதன்படி இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்!
இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து விதிகள்: இந்த நிலையில்தான் சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய பல்லாயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி பல்வேறு விதிகளான வேகமாக ஓட்டுவது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டுவது, டிராபிக் லைட்டுகளை பின்பற்றாமல் இருப்பது, கோடுகளை மதிக்காமல் நிற்பது, ரேஷ் டிரைவிங் செய்வது போன்ற காரணங்களுக்காக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.


Click it and Unblock the Notifications
