வாகன ஓட்டிகளுக்கு செக்! பாஸ்ட் டாக்கில் வருகிறது அதிரடி மாற்றம்! இன்னும் 1 வாரம்தான்! உடனே மாற்றுங்க
சென்னை:தேசிய நெடுஞ்சாலை கழகம் மூலம் 'ஒரு வாகனம், ஒரு FasTag' என்ற முறை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலை KYC முழுமையடையாத FASTags களை செயல் இழக்க வைக்க முடிவு செய்துள்ளது. இவை ஜனவரி 31, 2024 க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வாகனத்திற்கு. இனிமேல் ஒரு FasTagகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் ஒரே பாஸ்ட் டாக்கை ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி பயன்படுத்தப்படும் பழைய பாஸ்ட் டாக்குகள் ஜனவரி 31க்குப் பிறகு செயலிழக்கச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டோல்: இது போக விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
சுங்கச்சாவடி: சமீபத்தில், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு காலத்தை குறைப்பது மற்றும் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி நேரத்தை எளிதாக்குவது போன்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உலக வங்கியிடம் பல விவரங்களை தெரிவித்தது. FASTag செயல்படுத்தப்பட்டதன் மூலம், சுங்கச்சாவடிகளில் சராசரி காத்திருப்பு நேரம் வியத்தகு முறையில் குறைந்துள்ளது. தற்போது காத்திருப்பு நேரம் வெறும் 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது, இது முந்தைய 714-வினாடி காத்திருப்பில் இருந்து கணிசமான முன்னேற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக வங்கி பிரதிநிதிகளுடனான சமீபத்திய கலந்துரையாடலில், மத்திய அரசாங்கம் நாட்டின் உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான அதன் திட்டங்களை குறிப்பிட்டது. நவம்பர் இறுதி வரை, இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கம் புதிய உச்சத்தை அடைந்து உள்ளது.
வேகம்: மேலும், இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் மக்கள் செல்லும் சராசரி வேகத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வாகனங்களுக்கான வேக வரம்பு கடைசியாக ஏப்ரல் 2018 இல் புதுப்பிக்கப்பட்டது. தற்போது, நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 100 கிமீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 120 கிமீ வேகத்திலும் கார்கள் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. நகர்ப்புற சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ அனுமதிக்கப்படுகிறது. அதே சமயம் சராசரி வேகம் 70 கிமீ என்ற அளவில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ளது.
அதாவது 100 கிமீ அனுமதிக்கப்பட்டால் சாலை தரம், தடுப்புகள் காரணமாக சராசரி வேகம் 70 கிமீ ஆக உள்ளது. இதை 85 ஆக உயர்த்த.. அதாவது வாகனங்கள் சராசரியாக செல்லும் வேகத்தை அதிகரிக்க சாலைகளில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications