இனி சாலை முழுக்க ஹைபிரிட் கார்தான் போலயே.. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்.. இதை பாருங்க
சென்னை: மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹைபிரிட் வாகனங்களுக்கு 12% வரி குறைப்பை முன்மொழிந்து உள்ளார். இதன் இவி வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் விலை 21% விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுக்க இ மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இ மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வாகனங்களை நிறுத்தி சார்ஜ் செய்யும் விதமாக இந்த பாய்ண்ட் அமைக்கப்பட உள்ளது.
சாலை ஓரம் அரசு நிலத்தில் தமிழ்நாடு முழுக்க 100 இடங்களில் சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இந்த சார்ஜிங் பாய்ண்ட் அமைக்கப்படும். மின்சார வாரியம் சார்பாக இங்கே மின்சாரம் வழங்கப்பட்டு அதில் சார்ஜிங் பாய்ண்ட் இயங்கும்.
வரும் காலங்களில் மக்கள் பயன்பாட்டை பொறுத்து இந்த சார்ஜிங் பாயிண்ட்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கட்டணம் குறைப்பு: மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஹைபிரிட் வாகனங்களுக்கு 12% வரி குறைப்பை முன்மொழிந்து உள்ளார். இதன் இவி வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் விலை 21% விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஹைபிரிட் வாகனங்களுக்கான வரியை 12 சதவீதமாகக் குறைத்து, 4 மீட்டருக்கு கீழ் உள்ள ஹைபிரிட் மாடல் கார்களுக்கு 28 சதவீதமும், 4 மீட்டருக்கு மேல் உள்ள ஹைபிரிட் வாகனங்களுக்கு முறையே 43 சதவீதமும் வரியைக் குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்மொழியப்பட்ட கொள்கை செயல்படுத்தப்பட்டால், கலப்பினங்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் 21 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது மற்றும் தூய EVகளுடன் ஒப்பிடும்போது ஹைபிரிட் மாடல் காரக்ளுக்கு TCO சாதகமாக மாறும். இதனால் அதன் விலை மேலும் குறையம்
விலை குறைப்பு: சமீபத்தில்தான் Tata Motors இன் துணை நிறுவனமான Tata Passenger Electric Mobility (TPEM) அதன் Nexon.ev மற்றும் Tiago.ev ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளது. இதன் மூலம் இவி வாகனங்களின் விலை எதிர்பார்க்காத அளவிற்கு குறைந்துள்ளது.
Nexon.ev விலைகள் ₹ 1.2 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளன, Tiago.ev விலைகள் ₹ 70,000 வரை குறைக்கப்பட்டுள்ளன. Nexon.ev MR (நடுத்தர வீச்சு)க்கான புதிய விலைகள் ₹ 14.49 லட்சத்திலும், Nexon.ev LR (நீண்ட தூரம்) 16.99 லட்சத்திலும், Tiago.ev இன் புதிய விலை ₹ 7.99 லட்சத்திலும் தொடங்குகிறது
பேட்டரி செலவு: பேட்டரி செலவை குறைத்தான் மூலம் காரின் விலை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். விலைக் குறைப்பு பற்றி விளக்கம் அளித்த டாடா நிறுவனம், ஒரு EV-யின் ஒட்டுமொத்த செலவில் பேட்டரியின் விலை கணிசமான பங்கைக் கொண்டுள்ளது. சமீப காலமாக பேட்டரி செல்களின் விலை குறைந்துள்ளது. இதனால் கார் உற்பத்தி விலையும் குறைந்துள்ளது.
இதனால் கார்களின் விலை குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக EVகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், EV களை நாடு முழுவதும் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்களுக்கு வசதியாக விலையை குறைத்துள்ளோம், என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications