"வாடு நடிப்பே பண்டி ராயல் என்பீல்டு".. தமிழகத்தில் தயாரான 350 சிசி பைக்! என்ன ஸ்பெஷல்!
சென்னை: தமிழகத்தில் ராயல் என்பீல்டு பைக்குகள் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் தொடங்கப்பட்டது. இதை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் லால் அறிமுகம் செய்து வைத்தார்.
பைக்குகளில் எத்தனையோ வகைகள் வந்துவிட்டாலும் புல்லட்டின் மீதுள்ள மோகம் என்பது தீராது. டுபுடுபு என சப்தத்துடன் அந்த பைக்கில் கெத்தாக ஏறி ஓட்டிக் கொண்டு வரும் அனுபவத்தை பெற அனைவரும் விரும்புவார்கள்.

சிலர் என்னதான் சூப்பர் பைக்குகளை வைத்திருந்தாலும் ஜாவா, ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். இந்திய சாலைகளில் கம்பீரமாக வலம் வருகிறது இந்த புல்லட்.
பல்வேறு வேரியண்ட்களில் இந்த பைக்குகளை விற்பனைக்கு வருகின்றன. சென்னையை தலைமையிடமாக கொண்டு ராயல் என்பீல்டு பைக்குகள் இயங்கி வருகின்றன. ஸ்ரீபெரும்புதூரில் பைக் தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் இரு சக்கர வாகனம் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதோடு உலக நாடுகளிலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. 40 க்கும் மேற்பட்ட நிறுவனம் வர்த்தக பணிகளை மேற்கொண்டு வருகிறது. தன்னுடைய உற்பத்தி திறனையும் வெளிநாட்டு சந்தையையும் விரிவுப்படுத்துவதில் ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. 250 சிசி முதல் 750 சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்களை ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரிக்கிறது.
ராயல் என்பீல்டு பைக்குகள் 1000-க்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாராகி வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு செல்கின்றன. 650 சிசி வாகனங்களுக்கே உலக சந்தையில் நல்ல வரவேற்புள்ளது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் ராயல் என்பீல்டு 350 ரக பைக்குகள் தயாரானது. இதை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் லால் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த பைக்குகள் 3 வகைகளை கொண்டிருக்கிறது. ராயல் என்பீல்டு புல்லட் 350 வரிசையில் புதிய புல்லட் 350யின் ஜே சீரிஸ் சேஸ்ஸுக்கு மாறுகிறது. இதற்கு முன்புறத்தில் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் இருக்கும். இந்த பைக் அகலமான முன் மற்றும் பின் டயர்களுடன் வரும். எல்சிடி திரையுடன் கூடிய புதிய டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இருக்கும். இதில் யூஎஸ்பி போர்ட்டும் இருக்கிறது. இந்த பைக்குகளின் விலை 1.90 லட்சமாகும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications